Tuesday, December 6, 2011

விஷ்ணு சஹஸ்ரநாமம் 1-10


1. (1-9)
விஶ்வம் விஷ்ணுர்வஷட்காரோ பூ⁴தப⁴வ்யப⁴வத்ப்ரபு⁴: ।
பூ⁴தக்ருத்³பூ⁴தப்⁴ருத்³பா⁴வோ பூ⁴தாத்மா பூ⁴தபா⁴வன: ॥ 1 ॥

அண்டமாய்ப்பே ரண்டமாய் தோன்றுதேவி ராடமாய் 
இடம்விடாத ஒன்றுமாய் விளங்குகின்ற தெங்குமாய்
கண்டுகொள்ள தொண்டரால் பண்ணிசைக்கும் சின்னமாய் 
நேற்றுமின்று நாளையாய்ப் போற்றுகின்ற ஒன்றுமாய்

தோற்றிஉயிரைப் பேணுவான் பெற்றபிள்ளை போலவே
உற்றுமதனில் வாழுவான் உள்ளினுள்ளு மாகவே 
கிடந்தசைந் திருப்பவன் அனைத்தினுள்ளு மேயவன்
படைத்தயாவும் தோன்றவளரக் காரணமே தானவன் 

2. (10-17)
பூதாத்மா பரமாத்மா ச முக்தானாம் பரமாக³தி: ।
அவ்யய: புருஷ: ஸாக்ஷீ க்ஷேத்ரஜ்ஞோக்ஷர ஏவ ச ॥ 2 ॥

எதிலுமுள்ள ரசமும்நீ ஆத்துமத்தி னுள்ளும்நீ
செல்லுமுயிர் முடிவதாக உள்ளுகின்ற இடமும் நீ
கொல்லுகின்ற படியிலாத இணையுமிலாப் புருடனே
இடமறிந்த மாட்சிநீ அழிவிலாத சாட்சிநீ

3. (18-24)
யோகோ³ யோக³விதா³ம் நேதா ப்ரதா⁴ன புருஷேஶ்வர: ।
நாரஸிம்ஹவபு: ஶ்ரீமான் கேஶவ: புருஷோத்தம: ॥ 3 ॥

யோகம்தன்னில் உதிப்பவன் யோகம்கூட உதவுவான்
லோகம்தன்னில் தலையவன் சிம்மத்தலையில் தோன்றுவான்
திருமகளின் துணையவன் சுருண்டகுழலில் அழகிவன்
பிறந்திருக்கு மேழுலகின் சிறந்ததொரு நாயகன்

4. (25-36)
ஸர்வ: ஶர்வ: ஶிவ: ஸ்தா²ணுர்பூ⁴தாதி³ர்னிதி⁴ரவ்யய: ।
ஸம்ப⁴வோ பா⁴வனோ ப⁴ர்தா ப்ரப⁴வ: ப்ரபு⁴ரீஶ்வர: ॥ 4 ॥

யாதுமாக நின்றுஊழில் யாதும்போக சென்றழித்து
தூய்மையாகி யேதிடத்து நின்றிருக்கு முன்னிடத்து 
ஓய்ந்திடாத தோர்திறத்து தோன்றுகின்ற உயிர்கள்சென்று
ஓயுகின்ற தோரிடத்தின் ஊழினுள்ளு மேஇருந்து

நிகழ்வதில் லிருந்திருந்த ளிப்பதில்ம கிழ்ந்திருந்து 
விழைவுடன்ப டைத்திருந்த னைத்துமிங்கு காத்துநின்று 
பிழைபடா துடைதிறத்.. தெடுத்துநின் கொடை தனைக்    
குறைபடா தளிக்கும்நீயும் மன்னர்மன்ன னல்லவோ..!

** பழுதற்ற முழுமையான அறிவுடைய இவன், தீமைகளை உடைத்து , வேண்டுவன கொடுத்து வேண்டுவன அற்ற மன்னனானவன்.

5. (37-45)
ஸ்வயம்பூ⁴: ஶம்பு⁴ராதி³த்ய: புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: ।
அனாதி³னித⁴னோ தா⁴தா விதா⁴தா தா⁴துருத்தம: ॥ 5 ॥

தானேதன்னில் தோன்றுவான் தானுமான தம்பிரான் 
காணும்கண்ணின் கண்ணிவன் அழகைமயக்கும் அழகிவன் 
சூரியனின் ஒளியிவன் தாமரையின் விழியவன் 
வேதம்சொன்ன நாயகன் முதலும்முடிவு மற்றவன் 

படைத்திருக்கும் காரணன் படைப்பைக்காக்கும் நாரணன் 
நடத்திசெயலைப் பார்ப்பவன் செயலும்பலனும் ஆனவன் 
படைப்பதான பிரமனையும் படைத்திருக்கும் படியிவன் 
உடைபடாத அணுவினுள்ளே அணுவதான ஆண்டவன்

6. (46-55)
அப்ரமேயோ ஹ்ருஷீகேஶ: பத்³மனாபோ⁴மரப்ரபு⁴: ।
விஶ்வகர்மா மனுஸ்த்வஷ்டா ஸ்த²விஷ்ட:² ஸ்த²விரோ த்⁴ருவ: ॥ 6 ॥

உரைநடைக் குரைபடா திறைவரை யறைக்குறா
பொருள்-அது மருள்..வது களைந்..திடும் அருள்..அது
பிறை..தரும் இதம்..அது கதிர்..தனில் ஒளிர்..வது
உடல்..எழும் மலர்..தரும் உரம்..தனில் வளர்..புலம்
உயர்..அகம் உறை..அமர் அவர்..களின் தலை..அது

பெயர்ந்திடா திருந்திருக்கு மண்டம்-செய்த கோமகன்
உயர்வதான சிந்தனைக்கு மோர்தலை இவன்கலை
ஓய்வதாக வந்துயி
ர் அடங்குகின்ற தானவன்
பெரிதினும் பெருத்தவன் ஆதியாய் நிலைத்தவன்

உடல்எழும் மலர் = நாபித் தாமரை , உயர்அகம் = விண்ணகம் , உறைஅமர்அவர் = உறைகின்ற அமரர்கள்

7. (56-64)
அக்³ராஹ்ய: ஶாஶ்வதோ க்ருஷ்ணோ லோஹிதாக்ஷ: ப்ரதர்த³ன: ।
ப்ரபூ⁴தஸ்த்ரிககுப்³தா⁴ம பவித்ரம் மங்க³ல்த³ம் பரம் ॥ 7 ॥

புரிபடாத பொருளும்நீ முடிவிலாத ஏற்றம் நீ
கறைபடாத கொற்றம்நீ கருமை கொண்ட தோற்றம் நீ
சிவந்திருக்கும் தாமரை பழித்திருக்கு முன்விழி
அழித்துமூழில் நிற்பவன் அறிவில்சிறந்த விற்பனன்
*உலகம்மூன்றின் காரணன் உணர்வுமூன்றின் பூரணன்
விளங்குதூய்மை கொண்டுமே தோன்றிநிற்கும் மங்கலன்

*உலகம் மூன்று: பூ, விண், பாதாளம். உணர்வு மூன்று : ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்ன (கனவு), சுஷுப்தி (ஆழ் உறக்கம்)

8. (65-74)
ஈஶான: ப்ராணத:³ ப்ராணோ ஜ்யேஷ்ட:² ஶ்ரேஷ்ட:² ப்ரஜாபதி: ।
ஹிரண்யக³ர்போ⁴ பூ⁴க³ர்போ⁴ மாத⁴வோ மது⁴ஸூத³ன: ॥ 8 ॥

ஞாலத்துயிர் படைத்து-காத்து உயிருமா யிருப்பவன்
காலத்துக்கே காலம்சொல்லி காலம்கடந்து நிற்பவன்
சீலம்கண்டு போற்றலாகக் கோலம்கொண்ட கோமகன்
புலத்திருந்து உயிர்களுள்ளே உய்யுகின்ற  உயிரிவன்
தங்கவண்ணம் எங்கும்மின்னும் அங்கம்கொண்ட தூயவன்
எங்கும்உயிர்கள் தங்கும்புவியை காவல்கொண்ட தாயவன்
கோதில்லாத சாதுக்களின் செயலும்பலனும் ஏற்பவன் 
மாதவத்தில் மகரிஷிகள் மனதைவைக்கும் மாதவன்

9. (75-85)
ஈஶ்வரோ விக்ரமீத⁴ன்வீ மேதா⁴வீ விக்ரம: க்ரம: ।
அனுத்தமோ து³ராத⁴ர்ஷ: க்ருதஜ்ஞ: க்ருதிராத்மவான்॥ 9 ॥

வீரியத்தில் பெரிதவன் தைரியத்தில் உறைபவன்
வீரத்திலே வில்லெடுத்து காரியத்தை முடிப்பவன்
மறதியற்ற திறத்திலிவன் மறதிமறந்து மிருப்பவன்
சிறுத்தவொரு சீரடியில் வானளந்து நின்றவன்
சீர்ப்படுத்தி நேர்நிறுத்தி பார்நடத்தும் கோனவன் 

நேருமற்று எதிருமற்று இணையிலாமல் உயர்ந்தவன்
நேரிலாத தீமையாவும் கூர்படவே கிழிப்பவன்
ஊரும்விழி பக்திசெய்ய நன்றியாகக் கொள்பவன்
சேரும்பழி வந்திடாத நற்செயலில் தூண்டுவான்
கூறுமடி யார்கள்வானில் அரசுமாளச் செய்யுவான்

10. (86-95)
ஸுரேஶ: ஶரணம் ஶர்ம விஶ்வரேதா: ப்ரஜாப⁴வ: ।
அஹஸ்ஸம்வத்ஸரோ வ்யால்த:³ ப்ரத்யய: ஸர்வத³ர்ஶன: ॥ 1௦ ॥

கடவுளுக்குள் கடவுள்நீ சரணம்கொள்ளும் பொருளும்நீ
அடையும்-துரிய நிலையும்நீ  விரியும்-வெளியின் விதையும்நீ
பிறக்கும்-யாவும் உன்திறம் அடைக்கலமும் உன்னிடம்
சிறக்கச்-செய்வாய் பக்தரை மறுத்து-நீயும் வெறுத்திடாய்
விரைந்துமே கொடுப்பவன் நம்பிக்கைக்குப் பாத்திரன் 
உறைந்து-பார்த்..திருப்பவன் பார்வையாய் இருப்பவன்

_____________________________


 Prev            First           Next

1 comment:

  1. நம்பிக்கைக்குப் பாத்திரன்

    ReplyDelete