Sunday, January 29, 2012

தோடகாஷ்டகம்





சிறப்புமிக்க சங்கரர் தனக்குசீடர் தோடகர்
சிறப்புறும் மதிதனில் நிகர்இலை எனச்சகர்
சிரம்தனில் கனம்பட சீடர்பதும பாதரும்
புகன்றது செவிப்பட நகைத்துமே சங்கரர்
திகைப்புறத் தோடகர் தனக்கருள் புரிந்திட
சுவைபடப் பாடியே ஆடிவந்த தோடகர்
மழைஎனப் பொழிந்ததே குழைமனத்தி னட்டகம்
படித்திட தினம்தொழ பெறும்பலன் மகிழ்ந்தகம்




1
சிறந்தசாஸ்திரக் கடல்தனை அறிந்தநீயு மோர்இறை
மறைந்துநிற்கும் புதையலாம் உபநிடதங் கள்தனை
புரியும்வண்ணம் சொன்னஉன் பாதம்நெஞ்சி லேதுணை
தயை புரி தயாபரா சரணடைந்தேன் சங்கரா


2
கருணைக்கடல் ஆனவா அருளைப்பொழி ஆண்டவா
பிறவிக்கடலில் உழலுகின்ற திரணையில்லாக் குருணைநான்
சிறந்தமறை யாவையுமே அறிந்திடவே அருள்புரிவாய்
தயை புரி தயாபரா சரணடைந்தேன் சங்கரா


3
உயிர்களனைத்தி னுக்குமே மகிழ்ச்சிதன்னைத் தருபவன்
உயர்ந்தஉண்மை அறிவினை உரைக்கும்திறமை உடையவன்
தயைபுரிந் திறைஉணர் வினைஅருள் புரிந்திடு
தயை புரி தயாபரா சரணடைந்தேன் சங்கரா

4
எங்கும் நிறைஇறை நீயே விரைமறை
என்னும் உணர்வினில் பொங்கும் மனம்தனில்
இன்பம்வரும் தினம் துன்பப் பிறப்பினில்
என்னைப் படுத்திடும் பந்தத் தளைகளை
தயை புரி தயாபரா சரணடைந்தேன் சங்கரா


5
இறைதனில் கலந்திடும் விழைவினை அளித்திடும்
புரிந்தநல்ல சேவையும் செரிந்தஉந்தன் பார்வையும்
விரைந்துவந்து கைகொடு பேதைஎன்னைக் காத்திடு
தயை புரி தயாபரா சரணடைந்தேன் சங்கரா


6
உலகம்தன்னைக் காத்திட நல்லபாதை சேர்த்திட
உலவுகின்ற பெரியவர் தோன்றுகின்ற பலரில்நீ
ஒளியில்மின்னும் சூரியன் தலைசிறந்த ஓர்இயன்
தயை புரி தயாபரா சரணடைந்தேன் சங்கரா


7
குருவில்சிறந்த குருவும்நீ விடையில்திகழும் சடையன் நீ
எவருமிணை அற்றநீ அருளும்கருணைத் தாயும்நீ
கூறும்மறையில் உண்மைநீ மறைந்துநிற்கும் புதையல்நீ
தயை புரி தயாபரா சரணடைந்தேன் சங்கரா


8
ஆழமாய் விரிந்தநல் ஞானத்திலோர் சிறுகிளை
பாழும்மனதில் அறிந்திலேன் துளியும்அறிவு பெற்றிலேன்
விழும்விதம் இருக்குமென்னை விரைந்துவந்து காத்திடு
தயை புரி தயாபரா சரணடைந்தேன் சங்கரா

_______________________

மூலப் பாடல்




M.S













CHORUS





Bombay Sisters






No comments:

Post a Comment