Saturday, January 14, 2012

ராமச்சந்த்ர க்ருபாளு
ஸ்ரீ ராமச்சந்த்ர க்ருபாளு பஜு மன ஹரண பவபய தாருணம்
நவகஞ்ச லோசன கஞ்சமுக கரகஞ்ச பதகஞ் சாருணம்

நெஞ்சமே தினம்நினை புகழ்ந்துபாடு ராமனை
அஞ்சுமாறு புவிதனில் வலம்வரும் சுழற்சியாய்
பிறந்துபின் இறத்தலும் திரும்பநீ பிறத்தலும்
துரத்தியே அடித்திடும் திறத்துடை இறைஅவன்

அவன்விழி இரண்டுடன் சிறந்தவாயு மொன்றுடன்
புவனம்தன்னி லாரையும் காக்குமக் கரத்துடன்
யமன்சரண் அடைந்திடும் விதம்திகழ் நல்பாதமும்
கதிர்வர மலர்ந்திடும் குளம்உரை மலர்களாம்

கந்தர்ப்ப அகணித அமிதசவி  நவநீல நீரஜ சுந்தரம் 
பதபீட மான ஹுதடிதருசி  சுசிநௌம்ஜனக சுதாவரம்

எழிலில்மன்ம தன்தனை எளிதில்வெற்றி கொள்பவன்
அளவில்அடங்கி டாதென தோன்றுகின்ற  அழகவன்
வானில்உலவு கின்றஆழ்  நீலமேகம் போன்றவன்
மின்னல்ஒளி வீசிடும்   மஞ்சள்வண்ண ஆடையன்
மின்னும்வண்ணம் அழகுடன் சொன்னவண்ணம் செய்தவன்
ஜனகன் பெற்ற கோமகள் ஜானகியின் தலைவனாம்  

பஜு தீனபந்து தினேஷ் தானவ் தைத்ய வன்ஷ நிகந்தனம்
ரகுநந்த ஆனந்தகந்த கோசலசந்த தசரத நந்தனம்      

புகழ்ந்துராமன் பேரினை தினுமும்பாடு பாட்டினில்
ஏழையரின் நண்பனாம் சூரியனின் தலைவனாம்
வீழுமாறு அசுரராம் தைத்யதான வர்களை
அழித்துஅசுர வம்சவேர் களைஎடுத் தவெற்பவன்   
ரகுவின்பிரிய மானவன் *துரியமேகம் தானிவன்
கோசலைக்குச் சந்திரன் நேசமிக்க புத்திரன்
தந்தையான தசரதன் பாசத்துக்குப் பாத்திரன் 
விந்தையாக மனதைரமிக்கும் அழகுராமன் தானிவன்  
*துரிய = ஆனந்த

சிர முகுட குண்டல திலக சாரு உதாரு அங்க விபூஷணம்
ஆஜானுபுஜ ஷர ச்சாப தர சங்க்ராம ஜித கர தூஷணம்

சிரத்திலழகு க்ரீடமும் செவியில்திகழும் குண்டலம்
நூபுரத்தில் திலகமும் சொல்படாத எழிலுமாய் 
கோபுரத்தின் அழகெனத் தோன்றுமா பரணமும் 
காலின்பாதித் தொட்டிடும் வண்ணம்நீண்ட கைகளும்
வாளிகொண்ட வில்தனைக் கொண்டஅழகுத் தோற்றமாம்
போரில்கர தூஷணன் வென்றுகொன்ற ஏற்றமாம்  

இதி வததி துளசிதாச சங்கர சேஷ முனிமன ரஞ்சனம்
மம ஹ்ரிதைய கஞ்ச நிவாசகுரு காமாதி  கலதல கஞ்சனம்  

எவனுமில்லை சொல்வது துளசிதாசன் தானிது
சிவனுமாதி சேஷனும் தவத்தில்சிறந்த முனிவரும்
இவனில்மயங்கி ஆடினர் இவனைக்காண ஏங்கினர்
எந்தன்இதயத் தாமரை தனில்நீவந் தமர்ந்திரு
பந்தமாய்த் தொடர்ந்திடு மாசைதன்னை அழித்திடு 
மனதைமயக்கும் ராமனே மண்ணில்வந்த தெய்வமே..! 
No comments:

Post a Comment