Friday, October 31, 2014

1.3. மாயத்தைப் போக்க போக்க வல்லதாகும்

 மாயத்தைப் போக்க போக்க வல்லதாகும்
(மெட்டு:சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்- மன்னவன் வந்தானடி)

*** Please read the song along with the original Song ***

மாயத்தைப் போக்கவல்லதாகும் ராம ராம்எனத் தேன்சுரக்கும் நாமம்

(1+SM+1)

த்யானத்தில் போதம் கண்ட நல்லோர்
எல்லாம் நாவினில் என்றும்-கொண்ட வேதம்
(2)
மாயத்தைப் போக்கவல்லதாகும் ராம ராம்எனத் தேன்சுரக்கும் நாமம்
 (MUSIC)
நெஞ்சத்தில் இட்டுக்கட்டி அழகுறத் தொடுத்து 
பச்சைப்-பொய்..களைக்-கவின் கதையெனப் படித்து
நாளும்-உ..லகில்-வரும் மாயத்தின் குறும்பு
ஐயா சிந்தை கலங்காதே நாமமே மருந்து
மாயத்தைப் போக்கவல்லதாகும் ராம ராம்எனத் தேன்சுரக்கும் நாமம் 
ராம ராம்எனத் தேன்சுரக்கும் நாமம் 
ராம்எனத் தேன்சுரக்கும் நாமம்
 (MUSIC)
எண்ணத்தில் நாமமதைக் கொள்வீரன்போடு
தேஜஸ்வரூப மாக்கும் நாமத்தின் பீடு
என்றைக்கும் வந்திடுமோ சின்னஞ்சிறு கேடும்
(1+SM+1)
காலன் அரண்எனக் காத்திடுவான் தானே-அன்போடு
மாயத்தைப் போக்கவல்லதாகும் ராம ராம்எனத் தேன்சுரக்கும் நாமம் 
(MUSIC)
உள்ளத்தில் தான்-புகுந்து மாற்றங்கள் புரியும்
த்யானத்தில் பாதை-தந்து ஜாலங்கள் புரியும்
ஞானத்தில் தெய்வம்-வந்து *சொந்தத்தை உணர்த்தும் (2)
பின் கண்களின் அசைவில்-பல சொர்க்கங்கள் பிறக்கும்
மாயத்தைப் போக்கவல்லதாகும் ராம ராம்எனத் தேன்சுரக்கும் நாமம் 
ராம்எனத் தேன்சுரக்கும் நாமம்
த்யானத்தில் போதம் கண்ட நல்லோர்
எல்லாம் நாவினில் என்றும்-கொண்ட வேதம்
மாயத்தைப் போக்கவல்லதாகும் ராம ராம்எனத் தேன்சுரக்கும் நாமம் 
ராம ராம்எனத் தேன்சுரக்கும் நாமம்

ராம்ராம் ராமரா..மரா..மா.. (3) (Fade out)

*சொந்தத்தை= சொந்த ரூபத்தை (தான் ஆன்மா எனும் சத்ய ரூபம்)

No comments:

Post a Comment