Friday, October 31, 2014

1.5. இறையடி சரண்


இறையடி சரண்

(என்னிடம் சரணடைவதற்கு ஏற்றாற்போலவே
நான் பலனளிக்கிறேன்-கீதை  4:11)

குளம் நிறைந்த நீரிலே
முகந்த அளவு குடமுமே
இறைவன் கருணைக் கடலிலே
மனிதன் கொள்ளும் கருணையும்
இதயத் தூய்மை அளவிலே
வாய்மை தன்னின் அளவிலே

இதயத் தூய்மை பெருக்கிடு
மனதுக் குடத்தைக் கடலுமாய்
தூய்மை கொண்டு நிரப்பிட
அன்பு சேவை செய்திடு
பிறகு நினைந்து வேண்டிட
விளங்கும் மனமும் கடலென
இறைவன் கருணை நிரம்பிட
ஆகும் வெண்மை நிறம் பட


____________________

No comments:

Post a Comment