Saturday, November 1, 2014

7. ஆலயம்


ஆலயம்


கெட்டிப்பாலமுதும் சொட்டும்தேனதுவும் நித்தம்அவிசொரியும் யாகமும்
செய்து-வரத்தைப்பெற நித்தம்-மந்திரமும் சொல்லி-நிற்குதுபா ராலயம் 
அன்புப்பாலதையும் பண்புத்தேனமுதம் அவியுமாக்குமொரு ஆலயம்
சென்றுநாமும்தொழ என்றுதோன்றுமென நாளுமேங்கியது குவலயம்
அந்தவேதனையைக் கொன்று-சாதனையை அன்பில்வந்து அதைஊட்டவே 
இந்தகுவலயத்தில் எந்தஆலயமும் கொண்டிடாத இறையாட்டமே 
பந்தமாயங்களைப் போக்கிப் பாரிலுயர் ஆன்மஞான வழிகாட்டவே 
சத்தியத்தின்வடி வத்தில்வந்தது நித்தி-யத்தைநிலை நாட்டவே

____________________________

நாலுகல்லை நட்டுவைத்து நாதன்வாழும் கோயில் என்பார் 
ஆளுக்கொரு கோயில்கட்டி ஓடியோடிச் சுற்றிடுவார்
மாலிறைவன் நல்லசிவம் ரெண்டும்ஒண்ணு என்பவரும்
நெஞ்சில்கொண்ட ஆணவத்தால் ரெண்டில்ஒண்ணு பார்த்திடுவார்

அன்புகொண்டு அந்தசிவன் சத்தியத்தின் சக்திகொண்டு
பண்புசொல்ல வந்திடினும் யாரடாநீ என்றி..டுவார் 
நன்றுநன்று மானிடனே இன்றுஇங்கு உன்னுடனே
நின்றுநின்ற ஆத்துமமே என்றுமாதி சத்தியமே

சென்றுசென்று மீண்டும்வரும் உந்தன்உடல் உள்ளுக்குள்ளே 
புற்றுக்குள்ளே பாம்பெனவே சற்றுமசை வில்லாமலே
பற்றுப்பிழை கொள்ளாமலே ஆன்மமழி வில்லாமலே
என்றுமிருக் கின்றதென்று கண்டநெஞ்சு ஆலயமே

_______________________

மிகஉயர்ந்த கோவில்ஒன்று உன்னிடத்தில் இருக்குது
தெய்வவரவை எண்ணிஅதுவும் தினமும்-கிடந்து துடிக்குது
தொடக்கம்முதல் முடிவுவரை இயங்கும் இதயம்தானது
அன்பு-என்னும் தெய்வம்தோன்ற அதுவும்-கோவில் ஆகுது
  

________


No comments:

Post a Comment