Saturday, November 1, 2014

8. செல்வம்


செல்வம்

பணம்-கொடுத்து மருந்து-தன்னை வாங்கி-நீயும் குடிக்கலாம்
பணம்-கொடுத்து உடல்நலத்தை வாங்க-உன்னால் முடியுமா?.
பணம்-கொடுத்து பஞ்சணையும் மெத்தையும்-நீ வாங்கலாம்?.
பணம்-கொடுத்து தூக்கம்-உன்னால் வாங்கிடத்தான் முடியுமா?.
பணம்-கொடுத்து தங்கவைர நகைகள் வாங்கிப்-பூட்டலாம்?.
பணம்-கொடுத்து அழகை-உன்னால் கடையில்-வாங்க முடியுமா?.
பணம்-இகத்தின் உலகவாழ்வின் சுகங்கள்-யாவும் கொடுக்கலாம்?.
பணம்-பரம பதத்தின்-பேரா னந்தவாழ்வைக் கொடுக்குமா?.
பணம்-பெருக்க அறிவை-வளர்த்து அறிவைக்-குறைக்கும் மானிடா?.
அகந்தை-குறைக்க அறிவை-வளர்க்கும் வழியே-வழியும் தேனடா?
---------
உண்மையான செல்வம்-தன்னை எப்படிநாம் அளப்பது
நம்மிடத்தில் உள்ளநிறைய பொருள்கள்-தன்னின் அளவிலா
இல்லை-அவற்றை பெற்றிடநாம் கொடுத்த-பணத்தின் அளவிலா
இரண்டும்-காலம் இடத்தைப்-பொறுத்து ஏறி-இறங்கித் தோணுது
இதற்குபதில் எளிதெனவே நம்மிடத்தில் இருக்குது
நம்மிடத்தில் இருக்கும்-பொருள் தன்னில்-அதுவும் இருக்குது
எதற்கு-பதில் பெரும்-பணத்தை பெற்றிடநாம் மறுப்பது
இருக்கிறதோ அதைப்பொறுத்து செல்வம்-மதிப்பு பெறுகுது
செல்வம்தனைக் கொடுத்து-செல்வம் ஈட்டும்மார்க்கம் இருக்குது
அன்புசேவை தனக்குச்செலவு வரவுஎன்றே ஆகுது
நன்கிதனை உணரநமக்கு செலவும்-செல்வம் ஆகுது
அன்புதன்னைக் கொண்டநம்முன் செல்வம் எழையாகுது

____________

No comments:

Post a Comment