Friday, October 31, 2014

1.2. பாரெங்கும் சாமியைத் தேடினோம்

பாரெங்கும் சாமியைத் தேடினோம்
(மெட்டு: ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்- சாந்தி)

*** Please read the song along with the original Song ***

பாரெங்கும் சாமியைத் தேடினோம் கோயிலில் பூஜை செய்தாடினோம்

பாரெங்கும் சாமியைத் தேடினோம் கோயிலில் பூஜை செய்தாடினோம் 
தெரிவான் அந்த-பெருமான் உந்தன்-உள்சென்றேநீ தேடாயோ
(1+SM+1)
(MUSIC)
உன்சிரம்-காட்டில் உன்கரம்-நாட்டில் என்பது-யோகம் மறவாதே
மனம்-அதன் பாட்டில் திரிகிற-பாட்டில் ஒருபயன்இல்லை வீண்தானே  
(1+SM+1)
இதுவேண்டும்-என்று புரிகின்ற-போது அது-பூஜை என்று ஆகாதே
அது-பூஜை என்று ஆகாதே
பாரெங்கும் சாமியைத் தேடினோம் கோயிலில் பூஜை செய்தாடினோம் 
தெரிவான் அந்த-பெருமான் உந்தன்-உள்சென்றேநீ தேடாயோ
(MUSIC)
உனக்கென வேண்டி கேட்டுப்பெறாதே அவனே-தருவான் அருள்கோடி
பிறர்-நலம் நாடி அவர்-இடம் தேடி சேவைகள்-புரிவாய் விழைந்தோடி
(1+sm+1)
எது-வந்த போதும் இறைவன்-ப்ரசாதம் என்கின்ற-நெஞ்சம் பெறுவாயே
அதை-வேண்டி நீயும் பெறுவாயே
பாரெங்கும் சாமியைத் தேடினோம் கோயிலில் பூஜை செய்தாடினோம் 
தெரிவான் அந்த-பெருமான் உந்தன்-உள்சென்றேநீ தேடாயோ
_________________________________

No comments:

Post a Comment