ராமானுஜர், எண்ணற்ற க்ரந்தங்களை உலகுக்கு அளித்து சேவை புரிந்தார்.
எனினும், அவரின் விலை மதிப்பற்ற இரண்டு உலகளிப்பு , உலக உயிர்களிடத்து அளப்பரிய அவரது
அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
1) ஓம் நமோ நாராயணாய
என்ற திரு மந்திரத்தை, குருவின் கட்டளையையும்
மீறி , எல்லோருக்கும் உபதேசித்து , தான் அழிந்தாலும், உலக மாந்தர் கடைத்தேற வேண்டும்
என்ற அளப்பரிய அன்பை வெளிப்படுத்தினார்.
2) இரண்டற்ற ஒன்றே இறைவன் என்கிறது அத்வைதம். அந்நிலையில் இறைவனை
உணர பாமரர்க்கு வழி ஏது என்ற கருணையினால் ராமானுஜர் செய்திட்ட விசிஷ்டாத்வைத சித்தாந்தம் , தனக்கென ஒரு தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து
வழிபட்டுப் பின் அந்த பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்திடும், எளிய வழியை உபதேசிக்கிறது..
இந்த இரண்டையும் மையக் கருத்தாகக் கொண்டதே கீழ்கண்ட இரண்டு பத்திகளும்.
அவைகளை 1000 ஆண்டைக் கடந்தும் தெய்வ ஒளியுடன் திகழும் ஆச்சார்யர்
ராமானுஜரின் திருவடிகளில் மலர்களாகச் சமர்ப்பிக்கிறேன்.
ஆயிரம் ஆண்டின்-முன்னே பாரத
நாட்டின்-கண்ணே
ஞாயிறாய் அவதரித்த வைணவம் கண்ட-பொன்னே
தாயினும் பரிந்து-யாரும் உரைத்திட நாமம்-என்ன
ஆயினும் சொல்வேன்-என்றே உரைத்த-நின் கருணை என்னே
என்பதே முடிவின்-முடிவாய்க் கொண்ட-பேர் நின்றார்-பிடியாய்
அவருளே தனியின்-தனியாய் நின்ற-நீ சொன்னாய்-குருவாய்
எவருமே உணரும்-விதமாய் இறைவனை
அருவின்-உருவாய்
No comments:
Post a Comment