Saturday, April 5, 2014

எதோ எதோ தெய்வம்(இதோ எந்தன் தெய்வம் முன்னாலே)




எதோஎதோ தெய்வம் என்போரே
அது இதோஇதோ காஞ்சி மஹான் காண்பீரே
(2)
வேஷம் கண்டு மனிதன்-என்று எண்ணலாகுமா
அவர் யாவும்-கொண்டு உலகில்-வந்த பரமன்-தானம்மா
(2)
எதோ எதோ தெய்வம் என்போரே
அது இதோ இதோ காஞ்சி மஹான் காண்பீரே
 MUSIC

அவர் பூவுலகில் சிவனுருவாய் பிறந்தார்
பதின் மூன்றினிலே யாவையுமே துறந்தார்
(2)
குளிர் வெய்யில்-மழை தனை-மறந்து நடந்தார்
அலர் மலர்எனவே முள்தரையில் படுத்தார்
(2)
வேஷம் கண்டு மனிதன்-என்று எண்ணலாகுமா
அவர் யாவும்-கொண்டு உலகில்-வந்த பரமன்-தானம்மா

எதோ எதோ தெய்வம் என்போரே
அது இதோ இதோ காஞ்சி மஹான் காண்பீரே
 MUSIC

பலர் துயர்துடைத்தல் அவர்புரியும் வேள்வி
வினைப் புதிர்களுக்கு அவர்-பதமே சாவி
பிற மதத்தினரும் அடைந்திடுவார் தேடி
அவர் கண்ணசைவில் போகும்-ஜன்மம் கோடி(2)
எதோ  எதோ தெய்வம் என்போரே
அது இதோ இதோ காஞ்சி மஹான் காண்பீரே
MUSIC
ஒரு கணப்பொழுதில் தந்திடுவார் தீர்வை
பந்த பவமழிக்கும் அவரின் கடைப் பார்வை
அவர் இதயத்திலே இருப்பதெல்லாம் தூய்மை
அந்த தூய்மையிலே சிரிப்பதெல்லாம் வாய்மை(2)
 வேஷம் கண்டு  மனிதன்-என்று எண்ணலாகுமா
அவர் யாவும்-கொண்டு உலகில்-வந்த பரமன்-தானம்மா
எதோ எதோ தெய்வம் என்போரே
அது இதோ இதோ காஞ்சி மஹான் காண்பீரே



ஆ..ஆஆஆ...ஓ.ஓஓ

FIRST Page


No comments:

Post a Comment