Saturday, April 5, 2014

2.1. விதி மாற்றிடவே (Tune:விகிதாகில சாஸ்த்ர-தோடகாஷ்டகம் ) by MS


காஞ்சி மஹான்










விதிமாற்றிட..வேவரு..வாய்உலகே வழி காட்டிடு..வாய்குரு..வாய்இருந்தே(2)
இகமேல் உனைப்போல் இலையே குருவே அருள்சந்திர சேகரமே சரணம்

கருணாமுதமாகியே பாரளிப்பாய் பவசாகர-துக்கவிமோசனமும் (2)
அருளோடுமுன் கரிசனம் தா குருவே அருள்சந்திர சேகரமே சரணம் 

உளதாய்இலதாய்ச் சிறிதாய்ப்பெரிதாய் நிஜமாய்ஜகத்காரண..மானவனே (2)
இறையே  ஸ்திரபுத்தி விவேகத்தினை அருள்சந்திர சேகரமே சரணம் 

சிவ பரமசிவா (2)
சிவபரமசிவா ஸ்வாமிநாதகுஹா சிறுவயதினிலே குரு நீயல்லவா (2)
மமகாரமும் மோகமும் சென்றிடவே அருள்சந்திர சேகரமே சரணம்

சுடுதே வினையே என்றுதான் விடுமோ என நல்மனம் சஞ்சலமாகியதால் (2)
அதிவிரைவிலிதம் தரஅவதரித்தாய்  அருள்சந்திர சேகரமே சரணம்

ஜகத்தின் பொருளும் ஒளிகூட்டிடுமோ சுகபோகமும்தான் வழிகாட்டிடுமோ (2)
அறிவாய் மனிதாஇதை என்றகுரு அருள்சந்திர சேகரமே சரணம்

முனிபுங்கவர் சென்றடர் கானகத்தே தவத்தால் மனத்தால் உனைத்தேடிஒளி (2)
தருவாய்என த்யானத்தில் வேண்டுவதை அருள்சந்திர சேகரமே சரணம்

குருவாய் அருளாய் ஜகம்வந்துஉலா..விடும்உன்னையல்லால்  ஒரு தெய்வமெது (2)
பவம் போக்கவே தேடி அன்பாய் வருவாய் அருள்சந்திர சேகரமே சரணம் (2)

அருள்தந்திடும் உன்பத..மேசரணம்
அருள்சந்திர சேகரமே சரணம்

FIRST Page








No comments:

Post a Comment