மங்கா ஒளிவிளக்காய் முகத்தில் சிரிப்பிருக்கும்
மந்த்ரா லயம்தனிலே அழகாய் வீற்றிருக்கும்
இறவாத் துறவிகள்தம் அரசாய்ப் பெற்றிருக்கும்
மறவா திருக்கநெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்
திருராக வேந்திரரை மனம்தன்னில் துதித்திருநீ
கையில் கமண்டலமும் தண்டும் ஜபமணியும்
மெய்யில் அழகுதரும் காவிஉடையி னொடும்
கழுத்தில் துளசிமணி அழகுமிகு மாலைகளும்
விழுப்பம் கொடுத்திருக்கும் அழகின் வடிவுடனும்
இழக்கும் ஏதுமிலா வண்ணம் யாவையுமே
தொழுதே இறையடியில் கொடுத்தே சிறப்பெனவே
இருக்கும் குருராஜன் பாதம்தனில் பணிமனமே
பிறக்கும் இறக்குமந்த மாயை விலகிடுமே..!
_________________
No comments:
Post a Comment