Saturday, January 14, 2012

தூ தயாளு


தூ தயாளு தூ தயாளு
தூ தயாளு தீனு ஹம்
தூ தானி ஹம் பிகாரி
ஹம் பிரசித்த பாத்கி தூ பாப் புன்ஜ் ஹாரி 

அணைத்துக் கருணை பொழியும் நீ
அணைக்க யாரு மற்ற நான்
கேட்கும் வரங்கள் அருளும் நீ
நாடும் உந்தன் பக்தன் நான்
யாரு மறிந்த பாபி நான்
தேறும் வழியின் தெய்வம் நீ


நாத் தூ அனாத் கோ அனாத் கோனு மோசோ
மோ சமான் ஆரத் நஹி ஆரதிஹர் தோ சோ 

சோதியான தெய்வம்நீய னாதைகளின் ரட்சகன்
நாதியற்ற போக்குமற்ற நானுமோர னாதையே
துன்பம் போக்கும் சிறப்பு நீ
துன்பம் கொண்ட பிறப்பு நான்


பிரம்ம தூ ஹம் ஜீவ் தூ ஹை தாகூர் ஹம் சேரோ
தாத் மாத் குரு சஹா சப் பீதி ஹிதூ மேரோ 

விண்ணி ருக்கும் பரமம்நீ
மண்ணில் உழலும் சிரமன்நான்
நீயே நல்ல போதகன்
நானோ உந்தன் சாதகன்
எங்குமுள்ள நீதான் என்றும்
காக்கும் தாயும் தந்தையும்
கேட்கும் குருவும் நண்பனும்



தோஹி மொஹி நாதே அனேக் மானியே ஜொ பாவை
ஜ்யோன் ஜ்யோன் துளசி கிருபாளு சரண் ஷரன் ஆவே 

நீயும்நானும் சொந்தமே நீண்டகால பந்தமே தூயன்உன்னை எண்ணிடவே கண்டிடாதென் சித்தமே
விண்ணுமண்ணு மாகிநிற்கும் கண்ணில்காண அறிதுமாய்
பரந்துநீ இருப்பதால் விழைந்தஒன்று மாகநீ
தெரிந்தெடுத் தருள்கொடு உந்தனிரு தாள்கொடு
உவந்துநெஞ்சம் நெகிழ்ந்துநானும் சொல்லுகின்ற ஒர்மொழி
புகுந்துதஞ்சம் கொள்ளதுளசி தாசன்கண்ட ஓர்வழி
விரைந்துவந்து காத்திடாயின் உனக்குச்சேரு மோர்பழி




MS












_______________________

No comments:

Post a Comment