Saturday, January 14, 2012

நாம ராமாயணம்

பால காண்டம்

உயிர்கள் யாவும் படைத்த ராமன்
ஊழில் தன்னில் அடக்கும் ராமன்
நாகப் பாயில் துயிலும் ராமன்
பிரமன் தேவர் வணங்கும் ராமன்
சூர்ய வம்சம் விளங்கும் ராமன்
தசர தன்மன மதனில் ராமன்
கோச லைமன மகிழும் ராமன்
விஸ்வா மித்ர பாச ராமன்
தாட கைவ தைத்த ராமன்
மா ரீசநாசம் செய்த ராமன் 
கௌ சிகமுனி காத்த ராமன்
அகல்யா சாபம் நீக்கும் ராமன்
கௌ தமமுனி போற்றும் ராமன்
தேவர் வரம் அருளும் ராமன்
மிதிலை நகர் மகிழும் ராமன்
எளிதில் வில்லை முறித்த ராமன் 
சீதை மாலை இட்ட ராமன்
சீதை மணந்து மகிழ்ந்த ராமன்
பரசு ராமன் பணிந்த ராமன் 
அயோத்தி மக்கள் காத்த ராமன்

அயோத்யா காண்டம்

சிறந்த குணத்தின் உருவம் ராமன்
உறையும் மக்கள் அன்பன் ராமன்
தெளிந்த வான்முழு மதியும் ராமன்
தந்தை சொல்லைப் பணிந்த ராமன்
குகனும் சிந்தை கொண்ட ராமன்
அவனின் சேவை ஏற்ற ராமன்
பரத்து வாஜர் பணிந்த ராமன்
சித்ர கூடமலை வசித்த ராமன்
தந்தை மறைய நொந்த ராமன்
தம்பி பரதன் அழைத்த ராமன்
தந்தைக் கீமம் செய்த ராமன்
பரதனுக்குப் பாதரட்சை மனம்நெகிழ்ந்து தந்தராமன்

ஆரண்ய காண்டம்

தண்டக வனமுனி காத்த ராமன் 
துட்டவி ராடனைக் கொன்ற ராமன்
சரபங்க சுதீஷ்ணர் பூஜித்த ராமன் 
குறுமுனி அகத்தியர் அருளிய ராமன்
கழுகர சன்புகழ் செய்திட்ட ராமன்
*விழுதுடைந் தாலம் வாழ்ந்திட்ட ராமன்
அறிவிலி சூர்ப்பனை அடக்கிய ராமன்
கரதூ ஷணர்களை வதைத்திட்ட ராமன்
சீதைக் கெனமான் விரட்டிய ராமன்
சீதையை வனத்தில்  தேடிய ராமன்
கதியினைக் **கழுகினுக் கருளிய ராமன்
சபரிதந் தக்கனி உண்டிட்ட ராமன்
கபந்தனின் கரம்தனைத் துண்டித்த ராமன் 

*விழுதுடைந் தாலம் = விழுதுடைய ஐந்து ஆ  மரங்கள் (பஞ்சவடி) 
** கழுகு = ஜடாயு 


கிஷ்கிந்தா காண்டம்

அனுமனின் சேவையை ஏற்றநல் ராமன்
சுக்ரீ வன்தனக் குதவிட்ட ராமன்
தலைக்கன வாலியை வதைசெய்த ராமன்
உலகெலாம் குரங்கினை அனுப்பிய ராமன்
*உலவிடும் இலக்குவன் **ஆற்றிய ராமன் 


*உலவிடும் = உறங்கா உலவிக் காவல் செய்தவன்
**ஆற்றிய = ஆறுதல் சொன்ன 


சுந்தர காண்டம் 

அலைந்திடும் குரங்கினம் வழிபடும் ராமன்
தொலைந்திடத் தடைகளை நீக்கிடும் ராமன்
சிலையெனும் சீதையின் உயிரென ராமன்
பாதகன் ராவணன் தூற்றிய ராமன்
தூதுவன் அனுமன் போற்றிய ராமன்
சீதையின் அழுகையில் வருந்திய ராமன்
சூடிய மணியைக் கண்டிட்ட ராமன்
சீரிய மாருதி தேற்றிய ராமன் 


யுத்த காண்டம்


இலங்கையின் மேல்படை எடுத்திட்ட ராமன்
குரங்குகள் படைதனைக் கொண்டிட்ட ராமன்
சிறந்தவி பீஷண அடைக்கல ராமன்
சமுத்திரப் பாலம் அமைத்திட்ட ராமன் 
கும்ப கர்ணனை வதம்செய்த ராமன்
அசுரர்கள் படைதனை அதம்செய்த ராமன்
ராவணன் தனித்திடும் விதம்செய்த ராமன்
ராவணன் தனின்தச முகம்கொய்த ராமன்
அசுரர்கள் யாவரும் அழித்திட்ட ராமன்
அமரனாம் தசரதன் வாழ்த்திய ராமன்
சீதையைக் கண்டிட மனமகிழ் ராமன்
வீடண னையர சமர்த்திய ராமன்
புஷ்பகம் தனிகம் திரும்பிய ராமன்
வழிபட பரத்வஜர்க் கருளிய ராமன்
உயிர்விடும் பரதனைக் காத்திட்ட ராமன்
ஒளிவிடும் மணியென அயோத்தியின் ராமன்
அனைவரும் களிப்புறச் செய்தநல் ராமன்
மணியுரும் கட்டிலில் அமர்ந்திட்ட ராமன்
மணியென சூரிய வம்சத்தின் ராமன்
வீடணன் பணிந்திடும் பீடுடை ராமன் 
காடுறை குரங்கினம் போற்றிடும் ராமன் 
உலகெலாம் ஆண்டநல் மன்னனாம் ராமன் 
உலவிடும்  தெய்வமாம் வரமருள் ராமன்

துலங்கிடும் வெற்றியே அரசனாம் ராமன்
விளங்கிடும் செல்வமே சீதா ராமன் ..!


உத்தர காண்டம்

ஞான முனிவர் போற்றும்நல் ராமன்
ராவணன் பிறப்பிறப் பறிந்திட்ட ராமன்
சீதையின் அணைப்பினில் மகிழ்ந்திட்ட ராமன்
காத்திடும் விதமர சோச்சிய ராமன்
கூற்றினால் சீதைகா டேக்கிய ராமன்
*லவணனைக் கொன்றிட செய்திட்ட ராமன்
உயர்வுறை சம்புகன் மனமகிழ் ராமன் 
உயர்வுறு குசலவர் களில்மகிழ் ராமன்
உயரிய அஸ்வமேத மியற்றிய ராமன்
உயர்வுறை வைகுண்ட மேகிய ராமன்
அயோத்தியின் மாந்தர்க்கு முக்தியாம் ராமன்
பிரமாதி தேவர்க்கு ஆனந்த ராமன்
ஒளிர்ந்திடும் தோற்றமாம் எங்களின் ராமன்
விடுதலை அளித்திடும் தெய்வமாம் ராமன் 
அறத்தினை நாட்டிய தருமத்தின் ராமன்
அபயத்தை அருளிடும் அடைக்கல ராமன்
ஜடத்திலும் உயிரிலும்  இருக்கின்ற  ராமன்
சக்தியின் சக்தியே  சத்திய ராமன்
நோய்தீர்த் தருளிடும்  தாயன்றோ  ராமன்
வைகுண்டம்  தனில்யோக  ஆனந்த  ராமன் ..!


ஏக்கிய = செல்லும்படி செய்த (Passive of ஏகிய)
லவணன் = லவணாசுரன் 





















(Video Courtacy : Youtube )
ஸ்ரீ ராம ஜெயம்
_____________

2 comments:

  1. Very excellent and fantastic details Sridharan sir!! We are benefitted by the slokams according to the Kandams and also the several Videos through which we can hear the beautiful songs. Blessed are you and very fortunate to read and share your details!! Wonderful effort! Thanks so much!

    ReplyDelete
  2. Thank you for your kind words...Please visit www.spiritualsridharan.com , you may find some of its contents interesting.

    ReplyDelete