ஹே கோவிந்தா ஹே கோவிந்தா
ஹே-கோவிந்தா ஹே-கோவிந்தா எனச்-சரணடை *அறி..யா-மதியே (2)
காக்காதே உன் உயிர்-விடும்போதே (2)
இலக்கணத்..தின்-விதி நன்றாய் அறி-நீ (2)
ஹே-கோவிந்தா ஹே-கோவிந்தா எனச்-சர..ணடை-அறி..யா-மதியே
மூட மதீ-பணம் தேடலை விடுவாய் (2)
உண்மையின் உணர்வில் திளைத்தே இருப்பாய் (2)
எள்ளளவாயினும் அஃதே போதும் (2)
என்றிரு வினைப் பயன் கொண்டு எப்போதும்
ஹே-கோவிந்தா ஹே-கோவிந்தா எனச்-சர..ணடை-அறி..யா-மதியே
மாடாய் உழைத்தே பொருள் தரும் வரையில்
ஓடாதிரும் உன்..னுடன் உறை உறவுகள்
(2)
அந்தோ உன்னுடல் மூப்பினில் சாய (2)
பேசுவர் யார்-ஓர் வார்த்தை-உன்னோடே (2)
ஹே-கோவிந்தா ஹே-கோவிந்தா எனச்-சர..ணடை-அறி..யா-மதியே
காத்திடும் இளமையும் தனமுமுன் நட்பும் என நீ
நினைத்தால் அதுவும் போகும்
மாயா உலகினை விடுவாய் விடுவாய் (2)
உன்-நிஜம் காண பரமனை நினைப்பாய் (2)
ஹே-கோவிந்தா ஹே-கோவிந்தா எனச்-சர..ணடை-அறி..யா-மதியே
உடலின் சுகம்-பெறும் நோக்கினை நீக்குவன்
தானாய்க் கிடைப்பதில் மகிழ்ந்துயிர் வாழ்பவன்
(2)
சர்வம் அவன்-செயல் எனவே காண்பவன் (2)
பெற்றிடும் ஆனந்தம் போலெது கூறுவாய் (2)
ஹே-கோவிந்தா ஹே-கோவிந்தா எனச்-சர..ணடை-அறி..யா-மதியே
கற்ற-நல் கீதை துளியாகிடினும்
கற்ற-நல் கீதை துளியாகிடினும்
கங்கையின் நீரினில் துளி-பரு..கிடினும்
(2)
ஒருமுறையேனும் முராரி ..
ஒருமுறையேனும் முராரி..யவன் பேர் (2)
சொல்லிய..வன் முன் காலனும்
நில்லான் (2)
ஹே
கோவிந்தா
ஹே
கோவிந்தா
ஹே-கோவிந்தா ஹே-கோவிந்தா எனச்-சர..ணடை-அறி..யா-மதியே
பிறந்திட இறப்பும் ..
பிறந்திட இறப்பும் இறந்திடப் பிறப்பும் (2)
பிறந்திறப்பதுவும் அடடா கடினம் (2)
இது சம்சாரம் இதிலா சாரம் (2)
தயை தா ஸ்வாமி காத்தருள்வாயே (2)
ஹே-கோவிந்தா ஹே-கோவிந்தா எனச்-சர..ணடை-அறி..யா-மதியே
நாளும் கேளாய் கீதையின் சாரம் நாவில் செய்திரு நாம சங்கீதம்
(2)
த்யானம் செய்திரு பெம்மான் பாதம் (2)
தானம் செய்திரு தீனர்க்கெப்போதும் (2)
ஹே-கோவிந்தா ஹே-கோவிந்தா எனச்-சர..ணடை-அறி..யா-மதியே
பொன் பொருள்-மீது மோகமும் போதும்
ஓடிடும் அவை என எண்ணி..டெப்போதும்
(2)
பொன்னால் பொல்..லாத பயமே தோன்றுது (2)
சொந்தப் பிள்ளை ஆயினும் தோன்றுது (2)
ஹே-கோவிந்தா ஹே-கோவிந்தா எனச்-சர..ணடை-அறி..யா-மதியே
குருவடியானது நிர்மலமாக்குது
சம்சாரம் எனும் சோகத்தைப் போக்குது
(2)
ஐம்புலனாசையை விடலே யோகம் (2)
சொந்த ரூபம்-பின் இதயத்தில்-தோன்றும் (2)
ஹே-கோவிந்தா ஹே-கோவிந்தா எனச்-சர..ணடை-அறி..யா-மதியே (2)
*அறி..யா-மதி = சிலேடை
அறி + ஆமதி (நண்டு)
Here Mind is compared to Crab.
Crab has the tendency to pull down the other and so is the tendencies and vagaries
of the mind.
1
தினம்நினைகோ விந்தனை தினம்நினைகோ விந்தனை
பண்ணிசைத்துப் பாடுநீ அறிந்திடாத அறிவினாய்
பிணம்எனப் படும்விதம் உடல்விழும் கணம்தனில்
இலக்கணங் களின்விதி உயிர்தரா தறிந்திடு
2
மனம்தனில் எழுந்திடும் பணம்தனைக் குவித்திடும்
குணம்தனைத் துறந்திடும் விதம்தனில் இருந்திடு
விரைந்தெழும்பு மாசையின் நினைவினை எரித்திடு
இறைநினை வினைமனம் தனில்தினம் விதைத்திடு
சுரந்திடும் அருள்எனக் கிடைப்பதை நினைத்திடு
பறந்திடும் மனம்தனில் நிறைவினை அடைந்திடு
3
அழைத்திடும் விதத்தினில் எழுந்தபெண் தனங்களும்
விழைந்திடும் விதம்தனில் தோன்றுகின்ற நாபியும்
கொழுத்திடும் சதைதனின் மாற்றம்கொண்டதோற்றமே
அழிந்திடும் நிலைதனை அளிக்குமந்த மாயையே
இதைமனம் தனில்தினம் தொடர்ந்துமே நினைத்திடு
இரைப்படா திருந்தவை துறந்துநீ பிழைத்திடு
4
மலருகின்ற தாமரை இலையில்வீழ்ந்த நீரது
உருளுகின்ற துளிகளாய் நிலையிலாது ஆடுது
மருளுகின்ற மனதுடன் உடலில்உய்யும் உயிருமே
நிலையிலாது வாழுது தொலைந்துமோடிப் போகுது
உலகம் மாயமானது நோயும்பொய்யும் ஆனது
உலுக்கும்துன்பம் தன்னையே தன்னில்மறைத்து இருப்பது
உணர்ந்துமனதில் அறிந்திடு முயன்றுநன்மை தேடிடு
கரைந்துநெஞ்சில் பாடிடு கோவிந்தனைக் கூப்பிடு
5
சிறந்தஇளமை வலிமையும் விரைந்துசேர்க்கும் செல்வமும்
இருந்திருக்கும் வரையிலும் இருந்திருக்கும் சொந்தமும்
பிறகுவலிமை குன்றிட மூப்பில்நீயும் விழுந்திட
விரும்பியுமோர் வார்த்தையும் பேசவீட்டில் யாருளர் ?
6
மூச்சும் செயலும் இருக்கும் மட்டில்
பேச்சும் பரிவும் இருக்கும் வீட்டில்
போச்சு மூச்சு என்று மாக
அச்சம் கொள்வாள் மனைவி கூட
7
இளமைவிளை யாட்டிலே யௌவனம்பெண் கூட்டிலே
முதுமையிலே மனம்துளைக்கும் கவலையொன்றின் கேட்டிலே
எதுவரையில் இவைக ளென்று அறிந்திடாமல் வாழ்கிறாய்
சித்தத்திலே பரமன்பாதச் சிந்தனையை மறுக்கிறாய்
8
உந்தன்மனைவி யாரடா மைந்தன்என்ப தாரடா
விந்தைவிந்தை தானடாசம் சாரமென்றக் கடலடா
வந்துவந்து செல்லுகின்ற சாரமற்ற உடலடா
வந்தநீயும் யாரடா எங்கிருந்து மேயடா
சொந்தபந்த மில்லைசதம் வந்துசென்றி டாதிரா
வந்தநீயும் யாரடா எங்கிருந்து மேயடா
சொந்தபந்த மில்லைசதம் வந்துசென்றி டாதிரா
இந்தஉண்மை சிந்தனை தன்னில்வை சகோதரா
சதம்=நிலை
9
சான்றோர்கூட்டைப் பெற்றிடவே பற்றருந்து விட்டிடும்
பற்றுவிட்ட நெஞ்சிலறி யாமைநீங்கித் தெளிந்திடும்
பற்றுவிட்ட நெஞ்சிலறி யாமைநீங்கித் தெளிந்திடும்
சற்றும்கூட அழுக்கிலாத தூயஞானம் ஒளிவிடும்
கற்றறிந்து புரிந்திடாத உண்மையங்கு விளங்கிடும்
பற்றற்றானின் பற்றினாலே பற்றும்ஞானத் தீயினாலே
பெற்றுஒளிரும் ஜீவனும் நின்றுநிலைக்கும் முக்தியாம்
10
மறைந்துஇளமை குன்றிட முதுமைவந்து சேர்ந்திட
விரைந்து அடங்கி மறைந்திடும் காமக்களி யாட்டமும்
எரிந்தசூரி யன்தனால் நீரும் ஆவியாகிடும்
பறந்துநிற்கும் ஏரியும் நிலமெனவேக் காய்ந்திடும்
கரைந்துசெல்வ மழிந்திட மறையும்பரி வாரமும்
விரைந்துஉண்மை உணர்ந்திட மறைந்திடும்சம் சாரமும்
11
தேடிக்கொண்ட உடமையும் சேவைசெய்யு மாட்களும்
கடிதில்மறையக் கூடுமே காலதேவன் செயலினால்
விடுவாய்இவைகால் தூசென அழியும்தற்கா லிகமென
அறிவாய்அழியாப் பரமனை அடைவாய்அவன்கழல் நிழலினை
12
இரவுவரும் பகலும்வரும் வைகறையின் உதயம்மற்றும்
விரைவிலதனை தொடருமந்தி காலத்திலே அஸ்தமனம்
திரும்பக்காலச் சக்கரத்தின் சுழற்சியாலே வந்துசெல்லும்
எறும்பின்வரிசை போலேமாந்தர் வாழ்வும்பின்னே சென்றிருக்கும்
விருப்பமெனும் ஆசைப்புயல் அடங்கிடுதோ மனிதநெஞ்சில் ?
13
உற்றமனைவி பெற்றசெல்வம் பற்றிஅலையும் மானிடனே
போற்றுமருள் இறையிருக்க தேவையுமேன் மனக்கவலை
சற்றுமையம் கொண்டிடாதே கற்றறிந்த நல்லவரின்
உறவுமன்றி மூவுலகில் *பிறப்பிறப்பின் பெருங்கடலை
விரைந்தெளிதில் கடந்திடவே படகெனவே காத்தருளும்
நற்பொருளைப் பெறலரிது அறிந்திடுநீ மனம்தனிலே
*பிறப்பு + இறப்பு
14
விழுதுச்சடை முடியுடனோ வழித்தெடுத்த தலையுடனோ
விழுந்திருக்கும் காவியுடை வேடம்தனில் அலைந்திடுவர்
கழிந்திடவே முடிதனையே ஒன்றொன்றாய்ப் பிடுங்கிடுவர்
பாழடைந்த கண்ணினிவர் பார்வைகொண்ட குருடர்களே
தொழுதிடவேத் தோன்றலாகக் கொண்டவந்த வேடமுமே
வீழுமுடல் காத்திடவே சாண்வயிறை வளர்த்திடவே
15
தலைநரைத் துடல்கரைந் துபல்லிழந் தவாயுடன்
படும்உடல் விழாதிருக்கு மாறிருக்கச் சேவகர்
உடன்நடந் திருக்குமான கிழவனான போதிலும்
கெடும்விதம் மனத்திலாசை தோன்றுகின்ற தாயிரம்
16
மூண்டெரியும்அக்கினி தன்னின்முன்னால் இரவிலே
கன்னம்முழங் காலிலே புதைத்துமரத்தின் நிழலிலே
அமர்ந்துஇரந்து வாழினும் தேவைதுறந்து இருப்பினும்
நெருக்கிப்பிடிக்கும் சுருக்குமாய் ஆசைவிடா திறுக்கிடும்
17
புனிதத்தலங்கள் செல்லலாம் கங்கைக்கடலில் சேர்ந்திடும்
இனியசங்க மம்தனைத் தேடிச்சென்று அடையலாம்
கடினசபதம் தன்னையே மனதில் ஏற்று நடக்கலாம்
கொடையுமாகப் பல்பொருள் சிறப்புறவே கொடுக்கலாம்
எனினும்தன்னை அறிதலாம் மெய்ப்பொருளின் அறிவிலா
மனிதன்வாழ்க்கை தன்னிலே இனியுமொரு பிறப்பிலா
முக்திதன்னின் சிறப்பிலை அடையும்நூறு பிறப்பிலும்
18
கோயில்தனில் மரத்தடியில் வெறுந்தரையில் தூங்குவான்
மானின்தோலை இடையினிலே ஆடையாகக் கொள்ளுவான்
வீணில்தேவை எதுவுமற்று பற்றிலாதோன் வாழ்விலே
தேனில்தோய்த்த சுளைஎனவே இன்பச்சுவை பெருகுமே
19
யோகத்திலே திளைப்பினும் போகம்கொண்டு இருப்பினும்
ஆவல்கொண்டு நல்லவரின் சேர்க்கையிலே மகிழினும்
தேடமுடி யாததுமோர் இடத்தில்தனிமை கொள்ளினும்
ஒடுமனம் ஒருங்கிருத்தி இறைவன்மீது வைப்பவன்
மட்டுமுமே பாரினிலே ஆனந்தத்தில் திளைப்பவன்
20
சிறிதளவே கீதையினைக் கற்றுணர்ந்த போதினிலும்
பருகியநல் கங்கைநீரும் சிறுதுளியே ஆயிடினும்
உருகிமனம் கோவிந்தனைத் தொழுததொரு முறையெனினும்
*பொருதுமொரு நிலையிலையே உயிரெடுக்கும் யமனுடனே
*பொருதுமொரு நிலை = சண்டை இடுகின்ற நிலை
21
பிறந்திறந்து பின்னர்மீண்டும் தாயின்கர்ப்பம் தன்னிலே
இருந்திடும்சம் சாரக்கடல் அரிதுஅரிது கடந்திட
புரிந்திடுஉன் அருளையே காத்திடுநீ என்னையே
பரந்தஉந்தன் கருணையாலே *முரனைவென்ற கண்ணனே
*முரனை வென்றவன் = முராரி
22
கந்தலாடைஅணிந்தவன் பித்தம்கொண்ட சித்தனாம்
எந்தவொரு பாதையிலும் நடந்துசெல்லு மொருத்தனாம்
சித்தத்திலே யோகநோக்கம் தன்னைமட்டும் கொண்டவன்
நர்த்தனமாய்க் களிப்பிலாட்டம் இறைநினைப்பில் கொள்பவன்
சிறியவொரு குழந்தையாம் புரிபடாதப் பித்தனாம்
23
நானும்நீயும் யாரடா தாயும்தந்தை யாரடா
என்னும்கேள்வி யோடுநீ எங்கிருந்து வந்தவன்
என்னும்கேள்வி கேளடா சற்றேஎண்ணிப் பாரடா
உலகில்கொள்ளும் அனுபவம் விட்டுத்தள்ளி நில்லடா
உலகம்மாயக் கனவடா கற்பனை வெற்றுருவடா
இல்லையதனில் ரசமுமே என்றுமறிந்து கொள்ளடா
24
என்னில்உன்னில் உள்ளவன் அண்டமெங்கும் நிறைபவன்
தன்னில்கொண்ட நம்பிக்கை தன்னைநீயும் இழக்கிறாய்
நெஞ்சில்பொறுமை இழக்கிறாய் என்மேல்தாபம் கொள்கிறாய்
பஞ்சில்பற்றும் தீயெனவே கோபம்கொண்டு கொதிக்கிறாய்
மஞ்சமாகப் பாம்பினைக் கொண்டமஹா விட்டுணு
துஞ்சிடாத துன்பினால் மதியிழந்து துடிக்கிறாய்
மிஞ்சுகின்ற தவிப்புடன் பரமனாக முனைகிறாய்
கொஞ்சமேனும் வேற்றுமை கொண்டிடாமல் யாவையும்
நெஞ்சினிலே சமதையாய்க் கொள்வதொன்றே வழியுமாம்
அஞ்சிடாதே பேதையாய் துஞ்சிடுமே முக்தியாம்
25
உந்தன்ஆன்ம ஆற்றலை சண்டைசெய்து போக்கிடா
தென்றுமேநீ இருந்திடு சொந்தபந்தம் அன்றியும்
வந்தநண்பர் பலருடன் விரோதம்கொண்ட பகைவரும்
சிந்தைதன்னில் மகிழ்வுறப் பிறந்தமனைவி மக்களும்
தந்தைதாயும் யாவரும் ஒன்றுஎன்று உணர்ந்திடு
சிந்தைதன்னில் தோன்றுமறி யாமைதன்னைப் போக்கிடு
கொன்றுமந்தப் பிரிவினை எண்ணம்தன்னை புதைத்திடு
நன்றுஎன்று யாவும்ஒன்று என்றுமேநீ நின்றிடு
26
ஆசையும்பே ராசையும் கோபமறி யாமையும்
ஓசையின்றித் தள்ளியே தன்னில்உண்மை காண்பவன்
*காசுமற்ற ஞானியுலகு பேசுகின்றயோகியே
பாசமுற்று மாயைதன்னில் தானறியா யாவரும்
தூசுமான அறிவிலி இடர்ப்படுவார் நரகினில்
*காசுமற்ற = குறையற்ற
27
கீதைதன்னைப் படித்திடு *நாமம்தன்னை ஓதிடு
கோதைநாதன் ரூபம்தன்னை த்யானமதில் கண்டிடு
*கோதிலாத மாந்தருடன் நல்லுறவைப் பூண்டிடு
ஏதுமற்ற ஏழையுடன் செல்வம்பகிர்ந்து தந்திடு
*நாமம் = சஹஸ்ரநாமம்
*கோதிலாத = குற்றமற்ற
28
விழைந்துடலின் இன்பம்மென்றும் அடைந்திடவே நினைக்கிறாய்
பிறகுவரும் நோய்கள்தரும் துன்பம்தனில் துடிக்கிறாய்
மரிக்குமுடல் என்றறிந்து மடங்கிடாமல் அலைகிறாய்
புரியுமந்த பாவம்தனை விட்டிடாமல் தொடர்கிறாய்
29
செல்வம் செல்வதானது கொல்லும் ஆபத்தானது
செல்லுகின்ற மனதினில் என்றுமிதனைக் கொண்டிரு
எள்ளளவும் இன்பமதில் இல்லையென்று அறிந்திடு
செல்வந்தரின் வாழ்விலே மைந்தனிடமும் பயந்திடும்
பொல்லாநிலை இருந்திடும் தொல்லையென்றும் தந்திடும்
செல்வம்தனின் இயல்புமாக எங்குமிது இருந்திடும்
30
செயல்கள்தன்னைக் கட்டிடு புலன்கள்தன்னை விட்டிரு
முயன்றுத்யானம் செய்திடு கடவுள்நாமம் ஜபித்திரு
இயற்றும்மோனத் தவத்திலே உள்ளினுள் அமைந்திரு
இவற்றில்கவனம் கொண்டிரு உண்மைவிளங்கும் பொறுத்திரு
30-31
கீதைசொன்ன குருவிடம் தஞ்சம்கொண்ட பக்தனே
பாதைநன்கு கொண்டுநீ புலனும்மனமும் அடக்கிடு
போதைநல்கு மாயைதன் பிடியிலிருந்து விடுபடு
பக்திதன்னின் தூய்மைகொண்டு இறையைநெஞ்சில் கண்டிடு...!
32
தினம்நினைகோ விந்தனை தினம்நினைகோ விந்தனை
நினைப்பதில் களித்திரு வினைப்பயன் அழித்திரு...!
பஜ கோவிந்தம்
Dance recital
Bhaja Govindam is Global
Dance recital
Bhaja Govindam is Global
திருப்பதி கோவிந்தன்
Glimpse of ஆதி சங்கரர்
A saintly Chant and Chorus
ஜேசுதாஸ்
----------------------------------
No comments:
Post a Comment