Sunday, January 15, 2012

ஓம் ஜெய் ஜகதீச ஹரே




பேரு லகின் நாயக
சீறு லகின் நாயக
மனதின் துக்க வேதனை
கணத்தில் போக்கும் போதனே
ஆழ்ந்த பக்திக் கடலிலே
மூழ்கும் பக்தன் தனக்குமே
கிடைக்கும் அமிழ்தின் இனியவுன்
அருளில் விளையும் அன்புமே
கடந்து மாய உலகிலே
இடர்கள் அவனும் வெல்லுவான்
மிதந்து சுகத்தின் மேகத்தில்
இன்பம் துய்த்துச் செல்லுவான்

தாயும் நீ எந்தன் தந்தையும்நீயே
சேயுன்திருவடி அடைந்து நின்றேனே
*மாயா உண்மையை வேண்டுகின்றேனே
நீயன்றி வேறில்லை என்றுமேநானே
ஓயா மலேதினம் சொல்லுகின்றேனே
நீயாய்க் காத்திட நம்பிநின்றேனே

*மாயா = இறப்பிலா இறைநிலை

நீயே கோதற்ற திறமிக்க தெய்வம்
தாயே எனக்குற்ற கதிகாட்டும் உய்வும்
நீயே பிரம்மாண்ட உலகத்தின் உதயம்
நீயே தலையாய பரமாத்ம தத்வம்

கருணை கொண்ட கடலும் நீ
அருளைக் கொண்டு காக்கும் நீ
உந்தன் அன்பு பக்தன் நான்
தந்த அருளின் சித்தம் நீ

அறிதற்கரிய அறிவு நீ
உருவிலாத உருவும் நீ
அருவத்தினுள் உருவம் நீ
வருவாய் என்மனக் கூட்டினில்
தருவாய் உன்னருள் காட்சி நீ
தெளிவாய்ப் பாதை காட்டு நீ

அனாதைகளின் ரட்சகன் ஏழைகளின் நண்பன்நீ
வினைப்படாமல் காத்தருளும் இரக்கம்கொண்ட காவலன்
கருணைகொண்டு காத்திடவே எனக்கும்நீயும் கைகொடு
அடைக்கலமாய் வந்திடவே உந்தன்தாளைக் காட்டிடு

உலக ஆசை அறுத்திடு
பாவம் விலக அருளிடு
என்றும் உந்தன் பாதத்திலே
சேவை செய்ய அருளிடு
பக்தர் கொண்ட துன்பத்தையும்
அவர் மனதின் வேதனையும்
நொடியில் நீயும் பொடித்திடு

பேரு லகின் நாயக
சீறு லகின் நாயக
மனதின் துக்க வேதனை
கணத்தில் போக்கும் போதனே





Now Listen to the Original Version




















No comments:

Post a Comment