தேவா மகா தேவ தேவா (2)
சிவ தேவா சரண்தேவ தேவாதி தேவா
தேவா மகா தேவ தேவா
1.
சிரம்கொண்ட அழகான க்ரீடம்
நெற்றிக் கண்கொண்டு எரித்தம்பு தன்னோடு சூலம்
(2 lines together twice)
தான்கொண்டு தந்தானே மோட்சம் (twice)
நல்ல அமுதூறும் பிறைகொண்ட துணைதன்னைப் பாடு
தேவா மகா தேவ தேவா
சிவ தேவா சரண்தேவ தேவாதி தேவா
தேவா மகா தேவ தேவா
2.
உடலெங்கும் கொண்டானே பாம்பை
பெருங்கடலாகப் படர்கின்ற ஆகாச கங்கை
(2)
பிறைநின்ற அழகான நுதலை (2)
சித்தர் பணிகின்ற ஓம்காரன் துணைதன்னைப் பாடு
தேவா மகா தேவ தேவா
சிவ தேவா சரண்தேவ தேவாதி தேவா
தேவா மகா தேவ தேவா
3.
எப்போதும் ஆனந்த தோற்றம்
தீமை விரைந்தோடி நீக்கியே மலைகொண்டு அதமம்
(2)
போர்தன்னில் செய்தானே வதமும் (2)
அமரர் தலைபோற்றும் இலையாடை துணைதன்னைப் பாடு
தேவா மகா தேவ தேவா
சிவ தேவா சரண்தேவ தேவாதி தேவா
தேவா மகா தேவ தேவா
4.
சிரம்தன்னில் கனம்கொண்ட மதனன்
தன்னை எரித்தவான் சடைகொண்ட விடமுண்ட கண்டன்
(2)
ஒளிதன்னில் சூரியனின் கோடி (2)
வெள்ளை மல்லிகையின் பல்கொண்ட துணைதன்னைப் பாடு
தேவா மகா தேவ தேவா
சிவ தேவா சரண்தேவ தேவாதி தேவா
தேவா மகா தேவ தேவா
5
வரம்தன்னை அருள்கின்ற தருவாம்
நல்ல உரம்தன்னை மந்தர மலைக்கீந்த பெருமான்
(2)
பாதிஉடல் பார்வதியின் உருவாம் (2)
செம்பிற் செக்கச் சிவந்தோங்கும் துணைதன்னைப் பாடு
தேவா மகா தேவ தேவா
சிவ தேவா சரண்தேவ தேவாதி தேவா
தேவா மகா தேவ தேவா
பல ஸ்ருதி
சிறப்பான அப்பய்யர் தந்த
இந்த பாட்டுக்கு அரசானப் பாட்டை நீபாட
(2)
வழித்தோன்றும் துன்பங்கள் யாவும் (2)
ஓடி ஒழிந்தழியும் வரமருளும் சிவனருளும் கூடும்
தேவா மகா தேவ தேவா
சிவ தேவா சரண்தேவ தேவாதி தேவா
தேவா மகா தேவ தேவா
தேவா மகா தேவ தேவா (2)
____________________
No comments:
Post a Comment