உயர்வுமில்லை தாழ்வுமில்லை உயிர்கள்ஒன்று தானடா
உயிர்கள்உள்ளே உறைந்திருக்கும் ஆன்மமரியு மேயடா
பிறந்திருக்கும் யாவும்சமம் சிறிதுபெரிது ஏதடா
யாவினுள்ளும் இறைவனுண்டு என்பதைநீ அறியடா
அரசனுக்கும் அடிமைக்குமே தூக்கம் ஒன்றுதானடா
அந்தணனும் *நாலவனும் வாழும்உலகம் ஒன்றடா
*நாலவன்=நாலாம் வர்ணத்தவன்
தேவருக்கும் மிருகத்துக்கும் இன்பஉணர்வு உண்டடா
அனுபவிக்கும் இன்பதுன்பம் யாருக்குமே ஒன்றடா
அனுபவிக்கும் இன்பதுன்பம் யாருக்குமே ஒன்றடா
இரவும்வரும் பகலும்வரும் இருளும்ஒளியும் உண்டடா
சிறப்புகொண்ட செல்வனுக்கும் ஏழைக்குமே ஒன்றடா
கிடைக்கும்உணவு சுவையினிலே வேறுவேறு தானடா
சுவைத்திடவே உதவும்நாக்கு யாருக்குமே ஒன்றடா
மணத்தில்இனிமை நாற்றக்கொடுமை இரண்டுமிருக்க லாமடா
மணத்தைப்பரப்பும் காற்றுஇங்கு யாருக்குமே ஒன்றடா
யானைமேலும் நாயின்மேலும் அடிக்கும்வெய்யில் ஒன்றடா
நல்லவர்க்கும் தீயவர்க்கும் வேங்கடவன் காப்படா..!
_________________
DANCE
_________________
DANCE
No comments:
Post a Comment