எதுவும் பரமன் வசம்
பேசிடும் யாவும் பேசா தனவும்
படைத்திடும் யாவும் படைக்கா தனவும்
படித்திடும் யாவும் படிக்கா தனவும்
ஓதிடும் யாவும் ஒதா தவையும்
கற்ப்பிப் பவையும் முடியாதனவும்
அனுபவம் யாவும் மற்றவை தானும்
யாவும் பிரம்மமயம்
எதுவும் பரமன் வசம்
உணர்ந்திடு இதனை அமிழ்ந்திடு அதனில்
சேர்ந்திடு அவனை கிட்டிடும் அருளே
_____________________________
No comments:
Post a Comment