Friday, March 9, 2012

லிங்காஷ்டகம்





( மூல க்ரந்தத்தின் சந்தத்தில் அமைக்கப்பட்ட மொழிபெயர்ப்புப் பாடல் )
1
பிரமனும் மாலனும் பூஜித்த லிங்கம்
மற்றுள தேவரும் துதித்திடும் லிங்கம்
தூய்மையின் ஒளியினில் ஜொலித்திடும் லிங்கம்
மாய்தலும் பிறத்தலும் அறுத்திடும் லிங்கம்
நான்சிரம் வணங்கு சதாசிவ லிங்கம்

2
தேவரும் முனிவரும் பூஜித்த லிங்கம்
காமனைத் தகித்துமே எரித்திட்ட லிங்கம்
கருணையில் அருளினைப் புரிந்திடும் லிங்கம்
இராவணன் கர்வத்தை அழித்திட்ட லிங்கம்
நான்சிரம் வணங்கு சதாசிவ லிங்கம்

3
வாசனைப் பொருளபி ஷேகத்தின்  லிங்கம்
ஞானத்தில் சேர்ந்திட வழிதரும் லிங்கம்
ஞானிகள் தேவர்கள் துதித்திடும்  லிங்கம்
குணம்தனில் அசுரரும்   மதித்திடும் லிங்கம்
நான்சிரம் வணங்கு சதாசிவ லிங்கம்

4
தங்கத்தில் மணிகளில்  ஜொலித்திடும் லிங்கம்
மங்குவ தில்லா ஒளிவிடும் லிங்கம்
அங்கத்திலே பாம் பணிந்திட்ட  லிங்கம்
தக்கனின் யாகத்தைத் தரைசெய்த லிங்கம்
நான்சிரம் வணங்கு சதாசிவ லிங்கம்

5
சந்தனப் பூச்சினில் மணந்திடும் லிங்கம்
புனைந்த நல்காவியில் அணிபெறும் லிங்கம்
நறுமண மாலைகள் சூடிடும்  லிங்கம்
பவபயம் போக்கிட ஆடிடும்  லிங்கம்
நான்சிரம் வணங்கு சதாசிவ லிங்கம்

6
தேவர்கள்  யாவரும் பூஜிக்கும் லிங்கம்
மற்றுள உயிர்களும்  துதித்திடும்  லிங்கம்
பக்திநல் லுணர்வினை   அளித்திடும் லிங்கம்
சோதியில் கோடியின் சூரிய லிங்கம்
நான்சிரம் வணங்கு சதாசிவ லிங்கம்
   
7
எட்டு இதழ்களில் உறைந்திடும் லிங்கம்
எட்டிடா அண்டத்தைப் படைத்திடும் லிங்கம்
*பட்டுறும் யாவிற்கும் காரண  லிங்கம்
எட்டுதரித் திரம் போக்கிடும் லிங்கம்
நான்சிரம் வணங்கு சதாசிவ லிங்கம்
*பட்டுறும் = அண்டத்தின் பாற்ப்பட்டு இருக்கின்ற

8
தேவரின் குருக்களும் வணங்கிடும் லிங்கம்
சிறந்தநல் தெய்வங்கள் பணிந்திடும் லிங்கம்
தேவர்கள் நந்தவ னங்களில் லிங்கம்  
மலர்ந்திடும் மலர்களும் பூஜிக்கும் லிங்கம்
நிலைத்திடும் விதம்தனில் இருந்திடும் லிங்கம்
இறுதியின் சத்தியப் பாதையே லிங்கம்   
 நான்சிரம் வணங்கு சதாசிவ லிங்கம்

பலஸ்ருதி

லிங்கா ஷ்டகம் தனைச் சிவன்
பதம் நினைந் தோ திட
சிவ லோகம் சேர்ந் தவன்
பதம் தன்னில் வா ழுவான்




_________



















No comments:

Post a Comment