Friday, October 31, 2014

1.6. இறைவன் நாமம்



இறைவன் நாமம்



உலக வாழ்வு மாயச் சேறு
துன்பக் கடலில் சேர்க்கும் ஆறு
இறைவன் நாமம் கூறித் தேறு
ஓடிப் போகும் வினைகள் பாரு

_________________


ராம-ராம ராம-என்று சொல்லப்-போகும் பாபமே 
வேகம்-கொண்டு அமைந்திடாமல் கணமும்-அலையும் நெஞ்சிலே 
மோகமென்னும் ரோகம்-போக்கி அமர-வைக்கும் நாமமே
ஸ்நேக-பாவம் கொண்டு-சொல்ல காட்டும்-அவனின் ரூபமே


_________________


No comments:

Post a Comment