Saturday, November 1, 2014

5. மந்த்ர தந்த்ரம்


மந்த்ர தந்த்ரம்

நான்குவர்ணத்தவன் அந்தநந்தனவன் சொன்னமந்திரமும் என்னது
அந்தகண்ணப்பனும் தந்தமாமிசமும் நல்லஅர்ப்பணமும்ஆனது
பொங்குமன்பினொடு வந்தபாசத்தொடு செய்யும்சேவையது வானது
கந்தசந்தனமும் தங்கம்பட்டுடையும் கொண்டமந்திரத்தை வெல்லுது
 சொல்வளத்தினொடு நல்லமந்திரத்தை சொல்லும் கல்மனதுமானது
நல்திறத்தினொடு *மின்கணக்குமென சொல்லும்யந்திரம் போலானது  
கொண்ட வேஷங்களும் மந்த்ரபாஷைகளும் அன்பினால்-முழுமை ஆகுது
நெஞ்சபாசத்துடன் நொந்தஏழைகளின் துன்பம்போக்கஅவை பலிக்குது


*மின்கணக்கு = மின்னல் வேகத்தில்
____________________________

1 comment:

  1. நன்றி... மந்திர ஆலோசனை.. ஓரளவு புரிகிறது...

    ReplyDelete