சுய நலம்
சோறுபதம் ஆகும்வேகும் பஞ்சபூத நெருப்பிலே
கூறுகெட்ட நெஞ்சுபோகும் ஞானபோதப் பிறப்பிலே
எனதுதனது எனக்குஎன்ற எண்ணம்கொண்ட பிறப்பிலே
மூசுக்காற்றும் மூச்சுவாங்கும் சுயநலத்தி ணறலிலே
தனது-எனக்கு
என்றபேரை ஊரும்-மறைவில் எள்ளுமே
தனது-பேரை நினைக்கும்-பேர்க்கும்
அவரின்-பேர்நி.. லைக்குமே
மறந்தும்கூட
அவரைப்-போல இருக்கலாகா தென்னவே
பெயரை-மறைத்து
செய்த-உதவி சேவை-என்று ஆகுமே
**பேரைக்-காக்க சேவைபோலப் பாரில்எதுவும் இல்லையே
பெயருக்காக
செய்யும் செயலை சேவைஎன்ப தில்லையே
**பேரைக்-காக்க = சேவை செய்த
பேரைக் காக்க அவருடையப் பெயரைக் காக்க
_________________________
_________________________
No comments:
Post a Comment