Saturday, November 1, 2014

9. அருள் மழை


அருள் மழை


பாட்டுக்கள்ளைக் குடித்து-உன்னை நண்பன்-என்று கூவினேன்
ஏட்டுக்கவியில் வடிக்க-ஒருமை தன்னில்-உரிமை பேசினேன்
பாட்டுகவியின் எதுகை-மோனை கருதிச்-சிறுவன் ஆக்கினேன்
சேட்டை-செய்யும் வினை-விளைவால் உந்தன்அருமை உணர்ந்திலேன்
எனினும்-எந்தன் பாடல்-கேட்டு நீ-பொழிந்த அருள்மழை
பனியின் குளிர்ந்த உனது-நெஞ்சு பொழிந்த-நீறில் என்நிலை
என்னவென்று புரியுமோ எனதுநெஞ்சு அறியுமோ
விம்மிப்-பொங்கி அழுதகுரல் கம்மித்தழுத ழுக்குமோ
பம்மித் துடிக்கும் அதனைக்கொஞ்சம் அமைதிப்படுத்த வந்திடாய்
ஸ்வாமி-உந்தன் நினைவு-கொண்டு அதனை-நன்கு நிரப்பிடாய்
கடைப் பிறப்பின் கடையனாய் தனைமறந்த மடையனாய்
வாழும்-புல்லின் இழியன்-நான் ஊழ்-பிறப்பின் மனிதன்-நான்
ஏழ்-உலகம் படைத்து-ஆளும் உனக்கும்-என்னைத் தெரியுதே
ஏழை-எனக்கும் உனது-அடியின் பொடியில்-ஜன்மம் விடியுதே





_______________



No comments:

Post a Comment