லோகம்யாவின் நாயக..! வேதம்சொன்ன போதக..!
லோகமுய்யக் கருணையால்
அவதரித்த மாலவ..!
ஊழில்யாவும் அழியுமுன்
உயிர்கள்தன்னைக் காத்திட
அமிழ்ந்தவேதம் தன்னையும்
மீட்டெடுத்து தந்திட
அவதரிக்க லாகவே வடிவெடுத்த மத்ஸம்நீ
அறம்தழைக்க புவியிலே
முதலில்வந்த தோற்றம்நீ
அமுதம்கிடைக்க தேவர்கள் அசுரர்சேர்ந்து
மந்தர
மலையைக்கொண்டு கடைந்திட மலையும்அமிழ்ந்து முழுகிட
குலைந்தமலையும் நின்றிட நிலைத்துநிற்கும் அச்சென
தன்னைத்தந்து தாங்கிய குறைபடாத கூர்மம்நீ
இறந்திடாத நிலைபெற தேவர்களும் உண்டிட
அமுதம்தந்த மோகினி
அசுரர்கொன்ற திறமைநீ
அமுதம்உண்டு தேவர்கள்
உயிர்பிழைத்து வாழ்ந்தனர்
எனினும்மாந்தர் வாழ்ந்திடும்
புவியைக்கவர்ந்து அசுரனாம்
இரணியாக்கன் என்பவன் கடலில்மறைத்து ஒளித்தனன்
கருணையற்ற நெஞ்சில்நீ இல்லையென்று களித்தனன்
அமிழ்ந்தபுவியை மீட்டுநீ நன்மைசெய்து காத்திட
எழுந்தநல் வராஹமாய் அவதரித்த மாலனே
கடந்தவருடம் ஆயிரம் தன்னில்நீயும் போரிட
கிடந்துஅசுரன் மாண்டிட
கொண்டுபுவியை மீட்டநீ
கருணைகொண்ட தெய்வமே கிடந்தகோல மாலனே..!
அறம்தழைக்க வந்தவ அசுரர்கொன்ற மன்னவ
சிரம்கொழுத்த மமதையால்
மதியிழந்த இரணியன்
சிறந்தப்ரக லாதனை நாமம்சொன்ன பாலனை
இறைந்துகூவி கேட்டது எங்கேஅரி என்பது
உறைந்திருக்கும் இறையவன்
நிறைந்திருக்கும் படியவன்
உன்னில்கூட இருக்கிறான் தூணிலேயும் உறைகிறான்
வீணில்ஐயம் ஏனப்பா அகந்தையினைத் தள்ளப்பா
சாணில்உயரம் வளர்ந்திடா சிறுவன்சொன்ன சொல்லினால்
ஊனில்மட்டு மேவளர் உளம்வளரா மூர்க்கனாய்
வீணில்கொபம் கொண்டுமே
அரக்கன்கொதித்துக் குதித்தனன்
தூணிலேயா இருக்கிறான் ? துணிவில்லாதேன் மறைகிறான்?
இவனையாநீ தொழுகிறாய் ? கண்ணீர் விட்டேன் அழுகிறாய்
?
வதைத்தவனைக் கொல்லுவேன் நினைத்துநெஞ்சில் மகிழ்ந்திடு
புதைந்துமண்ணில் மாண்டிட
நேரம்நெருங்க அசுரனும்
விதியில்
சொன்னதிப்படி அழியுமவனின் மனப்படி
சிதைத்துக் கொல்லத்தூணிலே எழுந்தநர சிம்மம்நீ
சத்தியத்தைக் காத்திட
நித்தியத்தில் சேர்த்திட
சத்தியத்தின் யுகத்திலே
முடிவில்வந்த தோற்றம் நீ ..!
பிறந்தத்ரேத யுகத்தில்நீ புனைந்தவேடம் வாமனன்
நிறைந்தபக்தி கொண்டினும் நெஞ்சில்கொள்ள கந்தையால்
மறந்துபுத்தி ஓர்கணம் பிறழ்ந்ததால் மகாபலி
தருக்கிச்சிரித்துச் சொல்லினன் அடியில்மூன்று அளந்திட
பெருகிவளர்ந்து நீயுமோ நிறைந்துவானும் பூமியும்
அளந்துநின்றதீரடி சிரித்துநீயும் கேட்டதோ எங்களக்கமூவடி ?
விளங்கிக்கொண்ட பலியுமோ
தலைகுனிந்து அமர்ந்தனன்
மோக்ஷபெற ஒர்படி சத்யமுந்தன் சீரடி
காட்சிதரும் நீயுமே கடவுளின்மேல் ஒர்படி
அளக்கச்சிரத்தைக் காட்டினன் புளகிதத்தில் ஆழ்ந்தனன்
மகிழ்ச்சிகொண்ட அசுரனும் புரிந்துகொண்டான் தெய்வத்தை
இகழ்ச்சிபேசும் மாந்தரோ
புரிந்திடாத அசுரரே
சத்யமான
வாமனன் புரிந்தநெஞ்சில் ஒர்மனன்*
நித்தியத்தில் உறைந்தநல் ஆதியான வானவன்..!
தர்க்கம்-செய்து வினவிடும் ம் சிறுமை-நெஞ்சி..லே-இலன் ..!
அரசகுலஅக்கிர..மங்கள்தன்னைப்-போக்கவே வந்தபரசு
ராமன்நீ
விரைவில் கொடுமை களைந்திட
தோன்றியநல் அந்தணன்
புரிந்திடவே ராமன்சொல்ல பிறகுகோபம் தணிந்தனை
பெரிதெனவே அவனைக்கொண்டு
வணங்கியேநீ சென்றனை..!
உன்னைப்போல தந்தையின் சொல்லைக்கேட்க யாருளர்
பின்னர்தோன்றும் யாருமுன் பேரைச்சொல்வ..தோடுளர்
என்னேஉந்தன் தோற்றமே
என்னேஉந்தன் நெஞ்சமே
மனதைமயக்கும் மன்னனே
மனதில்திகழும் ராமனே ..!
த்ரேதம்கழிந்து சென்றது
த்வாபரமும் வந்தது
ப்ரேதம்-போல வாழும்-மாந்தர்
ஆன்ம-உணர்வு செத்தது
ஒருவனாக இல்லைநீ இருவராக வந்தது
பெறுவதான பாக்யமாய்
அமைந்துதானே போனது
லீலைசெய்யும் கண்ணனாய் உடலின்பல ராமனாய்
பாலசோத..ரர்என இரண்டினவ..தாரம்-நீ..!
கோலம்கெடும் கலிவரும்
முன்னர்வந்த போரிலே
ஜாலம்செய்த மன்னனே தர்மம்காத்த கண்ணனே
ஓலம்செய்த த்ரௌபதி மானம்-காத்த அண்ணலே
ஞாலமுய்ய ஓர்முறை சொன்னதுநீ ஓர்உரை
காலமாகிப் போனது பார்த்தனுக்கே ஆனது
பாதைகாட்டும் கீதையை
போதைநீக்கும் காதையாய்
புத்திஎட்ட சொன்னது சேவைசெய்து காட்டிநீ
சத்தியத்தின் வடிவமாய் கலியில் தோன்றிநின்றது
நித்தியத்தில் நீதரும்
கருணைகலந்த வித்துமாய்
பக்தியுள்ளோர் நெஞ்சிலே கல்கிஎன்றே
ஸ்புரிக்குது...!
ஒர்மனன்* = மனத்தில் வசிக்கக் கூடியவன்
No comments:
Post a Comment