சத்சங்கம் சேர்ந்திடுவாய் நெஞ்சே-நீ உயர்ந்திடுவாய்
மேலன கற்றிடுவாய் கீழானதை வெட்டிடுவாய்
(சத்சங்கம் சேர்ந்திடுவாய்..)
பேச்சினைக் கட்டிடுவாய் அலைகிறதை விட்டிடுவாய்
மேலவர் கூறுவதை சரிசரி-எனக் கேட்டிடுவாய்
(சத்சங்கம் சேர்ந்திடுவாய்..)
கற்றதனில் தேறிடுவாய் தேறியதில் ஊறிடுவாய்
பிழையறக் கற்றதனில் தேறிடுவாய் தேறியதில் ஊறிடுவாய்
சத்சங்கம் சேர்ந்திடுவாய் நெஞ்சே நீ உயர்ந்திடுவாய்
மேலன கற்றிடுவாய் கீழானதை வெறுப்பாய்
சத்சங்கம் சேர்ந்திடுவாய் நெஞ்சே நீ உயர்ந்திடுவாய்
No comments:
Post a Comment