அஜஸ்ஸர்வேஶ்வர: ஸித்³த:⁴ ஸித்³தி⁴: ஸர்வாதி³ரச்யுத: ।
வ்ருஷாகபிரமேயாத்மா ஸர்வயோக³வினிஸ்ஸ்ருத: ॥ 11 ॥
பிறந்திடாத ஒன்றும்நீ இருந்திருக்கு மொன்றும்நீ
கரைந்தழைக்கும் நெஞ்சிலே விரைந்துசெல்லு மெண்ணம்நீ
குறைபடா திரும்நிறை உரைபடா துறும்மறை
விரைபடு மிலக்குநீ துலங்குகின்ற சோதிநீ
யாது மானவாதிநீ ஒதும்நல்ல வேதம்நீ
எழும்மறத்தி னூழிலே விழும்விதத்தி லாகவே
கரைந்தழைக்கும் நெஞ்சிலே விரைந்துசெல்லு மெண்ணம்நீ
குறைபடா திரும்நிறை உரைபடா துறும்மறை
விரைபடு மிலக்குநீ துலங்குகின்ற சோதிநீ
யாது மானவாதிநீ ஒதும்நல்ல வேதம்நீ
எழும்மறத்தி னூழிலே விழும்விதத்தி லாகவே
ஆழ்ந்தமிழ்ந்த புவிதனை காத்தநல்வ ராஹம்நீ
கற்றுறாச் சிறப்புநீ பற்றுராப் பிறப்புநீ
12. (105-114)
வஸுர்வஸுமனா: ஸத்ய: ஸமாத்மா ஸம்மிதஸ்ஸம: ।
அமோக:⁴ புண்ட³ரீகாக்ஷோ வ்ருஷகர்மா வ்ருஷாக்ருதி: ॥ 12 ॥
வசுக்களில் சிறந்தவன் வசிப்பதை உகந்தவன்
அசைந்திடாத உண்மையில் இசைவுறும் மனத்தவன்
பிழைபடாத் தராசென அசைவுறா மனத்தினன்
மறைதனில் ஒளிர்பவன் விரைமுனி உணர்பவன்
குறைபடா நிறைஅவன் குறைந்திடா *விரைஅவன்
நடு நிலை வகிப்பவன் தொழுதிடக் கொடுப்பவன்
தாமரை விழியினன் நேர்மையின் வழியினன்
அறத்திலே உறைபவன் அறமுமா யிருப்பவன்
வசிப்பதை உகந்தவன் = பக்தர் மனதினில் வசிப்பதை விரும்புபவன்
விரைமுனி = சிறந்த முனிவர்களால் உணரப் படுபவன்
விரை= சிறப்பு, சிறந்த , செல்வம்
அசைந்திடா நிரையவன் = நீதி பிழறாத தராசு ( பக்தர்களை சமமாக பாவிப்பவன்)
13. (115-123)
ருத்³ரோ ப³ஹுஶிரா ப³ப்⁴ருர்விஶ்வயோனி: ஶுசிஶ்ரவா: ।
அம்ருத: ஶாஶ்வதஸ்தா²ணுர்வராரோஹோ மஹாதபா: ॥ 13 ॥
நெகிழ்ந்தகண் சுரப்பவன் எழுந்தபல் சிரத்தவன்
ஏழுலகின் அரசனாம் அவைபிறந்த கர்ப்பமாம்
எழிலுமான புனிதமான பெயர்கள்கொண்ட சிறப்பவன்
பிறந்திடாநல் பிறப்பவன் இறந்திடாமல் இருப்பவன்
நிலைத்துநிற் பதாயிருந் தசைவுறா நிரந்தரன்
முயன்றுசென் றடைவதாய் சிறந்திருக்கு மோரிடம்
பயின்றநல் தவத்திலே உறைவதான ஞானமாம்
14. (124-134)
ஸர்வக:³ ஸர்வ வித்³பா⁴னுர்விஷ்வக்ஸேனோ ஜனார்த³ன: ।
வேதோ³ வேத³வித³வ்யங்கோ³ வேதா³ங்கோ³ வேத³வித்கவி: ॥ 14 ॥
அனைத்தையும் கடந்தவன் அனைத்திலும் நிறைந்தவன்
எதிர்த்தவனை வெல்லுமோர் படையிலாத் திருமகன்
துதித்திருக்கும் நல்லநெஞ்சில் மகிழ்ச்சிகொண்டு சேர்ப்பவன்
வேதமாயி ருப்பவன் வேதமறிந்த சிறப்பவன்
வேதமுற்ற அங்கமாகி வேதவித்து மானவன்
கோதுமற்ற குறைகளற்ற தீர்க்கதரிசி தானிவன்
15. (135-142)
லோகாத்⁴யக்ஷ: ஸுராத்⁴யக்ஷோ த⁴ர்மாத்⁴யக்ஷ: க்ருதாக்ருத: ।
சதுராத்மா சதுர்வ்யூஹஶ்சதுர்த³ம்ஷ்ட்ரஶ்சதுர்பு⁴ஜ: ॥ 15 ॥
உலகனைத்தின் நாயகன் தேவர்கணக் கோனவன்
அறத்துக்குமே அறமவன் அனைத்துக்குமே அரசவன்
பிறந்ததுவும் பிறப்பித்ததும் ஆகும்புருஷன் தானிவன்
உணர்வுநான்கின் காரணன் தோற்றம்நான்கில் பூரணன்
சினப்பல்வினையைப் போக்குமாம் புஜங்கள்நான்கு காக்குமாம்
16. (143-152)
ப்⁴ராஜிஷ்ணுர்போ⁴ஜனம் போ⁴க்தா ஸஹிஷ்ணுர்ஜக³தா³தி³ஜ: ।
அனகோ⁴ விஜயோ ஜேதா விஶ்வயோனி: புனர்வஸு: ॥ 16 ॥
சுயம்ப்ரகாச ஒளியுடன் உணர்வின்சோதி யானவன்
புலன்வயம் படும்பொருள் தனில்படா திருப்பவன்
அதில்படும் உயிர்களின் குறைதனைப் பொறுப்பவன்
உதிக்குமண்ட மானவன் அதற்குமுன் னிருப்பவன்
தொற்றும் பாவமற்றவன் என்றும்எதிலும் வெற்றியைப்
பெற்றிருக்கும் கொற்றவன் தோல்விஎன்றும் அற்றவன்
சுற்றுருண்ட அண்டம்தன்னை தோன்றச்செய்த காரணன்
மற்றிருக்கும் யாவினுள்ளும் உள்ளுமான ஆண்டவன்
17. (153-164)
உபேன்த்³ரோ வாமன: ப்ராம்ஶுரமோக:⁴ ஶுசிரூர்ஜித: ।
அதீன்த்³ர: ஸங்க்³ரஹ: ஸர்கோ³ த்⁴ருதாத்மா நியமோ யம: ॥ 17 ॥
இந்திரனுக் கிளையவன் அவனுக்கும்-மே..லானவன்
சிறுவனான வாமனன் பரமபுருஷ னானவன்
சிறந்தநோக்கம் கொண்டவன் நோக்கிடவே தூயவன்
விரிந்ததொரு வீரியத்தில் முடிவில்லாத மாயவன்
தானேதன்னில் தோன்றுவான் தன்னில்யாவும் கொள்ளுவான்
தானுமான தம்பிரான் நியமம்செய்தி டாதிரான்
தன்னிகரும் ஒன்றிலாத நிருவகிக்கும் ஓர்பிரான்
18. (165-174)
வேத்³யோ வைத்³ய: ஸதா³யோகீ³ வீரஹா மாத⁴வோ மது⁴: ।
அதீன்த்³ரியோ மஹாமாயோ மஹோத்ஸாஹோ மஹாப³ல: ॥ 18 ॥
அறியஉரிய கருத்தவன் நோய்கள்முறிய மருத்துவன்
என்றும்யோகம் கொள்பவன் சமரில்வெற்றி கொள்பவன்
நின்றஞானக் குன்றவன் தின்றபொருளில் இனிப்பவன்
புலன்கள்ஓயக் கடப்பவன் உலகமாயை துடைப்பவன்
மலர்ந்தமுகத்தின் ஆர்வலன் மிகுந்தான ஓர்பலன்*
*பலன் = பலமுடையவன் / பலசாலி
19. (175-182)
மஹாபு³த்³தி⁴ர்மஹாவீர்யோ மஹாஶக்திர்மஹாத்³யுதி: ।
அனிர்தே³ஶ்யவபு: ஶ்ரீமானமேயாத்மா மஹாத்³ரித்⁴ருக் ॥ 19 ॥
தலைசிறந்த அறிவுநீ அனைதினுள்ளும் சாரம்நீ
குலைந்திடாத சக்திநீ அணைந்திடாநல் சோதிநீ
விளக்கவொண்ணா தோற்றம்நீ குறைந்திடாத திருவும்நீ
அளக்கவொண்ணா சாரம்நீ நிலைத்திருக்கும் மலையும் நீ
20. (183-190)
மஹேஶ்வாஸோ மஹீப⁴ர்தா ஶ்ரீனிவாஸ: ஸதாங்க³தி: ।
அனிருத்³த:⁴ ஸுரானந்தோ³ கோ³வின்தோ³ கோ³விதா³ம் பதி: ॥ 2௦ ॥
அம்பு எய்யும் வீரன்நீ புவியைஉய்யச் செய்யும்நீ
உன்னிலுறை இலக்குமி நல்லோர்நாடும் இலக்கு நீ
தடைபடாத பொருளும்நீ கொடுக்குமின்ப அருளும்நீ
பசுக்கள்தன்னைக் காப்பவன் ஞானியர்கள் நாயகன்
_____________________________
_____________________________
No comments:
Post a Comment