Tuesday, December 6, 2011

விஷ்ணு சஹஸ்ரநாமம் 21 - 30 21. (191-199)
மரீசிர் தமநோ ஹம்ஸஸ் ஸுபர்ணோ புஜகோத்தம:1
ஹிரண்யநாபஸ் ஸுதபா: பத்பாநாப:ப்ரஜாபதி: ||

பிரித்தெடுக்கு  மன்னமாய் அழைத்துச்செல்லும் வண்ணமாய்
சிறகுகொண்ட  பறவைநீ ஆதிசேஷன் மன்னன்நீ
பொன்னின்வண்ண நாபியில் மின்னிநிற்கும் தாமரை
தன்னில்தோன்ற லாகவே உயிர்படைத்த அறிவுநீ

 22. (200-210)
அம்ருத்யுஸ் ஸ்வத்ருக் ஸிம்ஹஸ் ஸந்தாதா ஸநதிமாந்ஸ்த்திர: |
அஜோ துர்மர்ஷணஸ் ஸாஸ்தா விஸருதாத்மா ஸுராரிஹா!!    

அழிவிலாத வழியவன்  யாவும்நோக்கும் விழியவன்
ஊழிலே அழிப்பவன் செயலில்பலனை  இணைப்பவன்
ஈரவிழி கொண்டநெஞ்சின் பக்தருக்குத்  துணையவன்
*உரப்படவே அவர்கள்நெஞ்சில் என்றும்நிலைத் திருப்பவன்

தடைகள்களையு மிவனையே வெல்லஎவரு மில்லையே
விரிந்த அண்டமாள்பவன்  சிறந்தமறையில் வாழ்பவன்
புரிந்தகோரச் செயல்களால் பிறந்தஅசுரர் யாவர்க்கும்
ஒருத்திருக்கும் பாதகன் கீதைசொன்ன போதகன்

*உரப்படவே = திடமாக

 23. (211-219)
குருர் குருதமோ தாம ஸத்யஸ் ஸத்ய பராக்ரம: |
நிமிஷோsநிமிஷஸ் ஸ்ரகவீ வாசஸ்பதி ருதாரதீ: ||

குருவிற்சிறந்த  குருவவன் குருவினுக்கே குருவவன்
சிறந்ததா யிருக்கும்யாவும் தங்குகின்ற உறைவிடம் 
தோன்றிநிற்கும்  உண்மையாம்  தோற்றிடாத வீரவான்
யோகம்கொண்டு கண்களை மூடித்தோன்றும் யோகியாம்
அறிந்துநோக்கும் திறமையில் திறந்திருக்கும்  கண்ணனாம்
மலர்ந்த  மாலைசூடுவான் விரிந்ததான ஞானவான்

 24. (220-229)
அக்ரணீர் க்ராமணீஸ் ஸீமாந் ந்யாயோ நேதா ஸமீரண: |
ஸஹஸ்ர மூர்தா விஸ்வாத்மா ஸஹஸ்ராகஷஸ் ஸஹஸ்ரபாத் !!  

விளங்கயாவும் சொல்லுவான் வழிநடத்திச் செல்லுவான்
துலங்குதிருவின் பதியிவன் நீதிக்குமோர் கதியிவன்
உலகம்யாவும் இவன்வசம் உயிர்கள்உள்ளே இவன்நிசம்
நூறின்நூறு மடங்குமாய் தலையும்பதமும்   கொண்டவன்
கூரின்விழிகள் ஆயிரம் கொண்டநல்ல கண்ணனாம்
பாரிலுறையும் யாவிலும் உள்ளிருக்கும் உயிருமாம்

 25. (230-237)
ஆவர்தநோ நிவ்ருதாத்மா ஸம்வ்ருதஸ் ஸம்ப்ரமர்த்தந: |
அஹஸ் ஸம்வர்தகோ வஹ்நி ரநிலோ தரணீதர: ||

உலகமாயை நடத்துவான் அதுவும்கடந்து கிடப்பவன்
மறைந்துஎங்கும் விளங்குவான்  இருளைப்போக்கும் விளக்கவன்
ஒளிரும் *ஆதியானவன்  அதனில்தீயு மானவன்
உயிரின்மூச்சுக் காற்றவன் புவியைத்தாங்கி காத்தவன்

*ஆதியானவன் = ஆதித்யன் = சூரியன்


 26. (238-247)
ஸுப்ரஸாத::ப்ரஸந்நாத்மா விஸ்வஸ்ருக் விஸ்வபுக் விபு: |
ஸத்கர்தா ஸத்க்ருதஸ் ஸாதுர் ஜஹ்நுர் நாராயணோ நர: ||

 உலகில்வாழும்  யாவருக்கும் நற்பலன்கள் தருபவன்
மலர்ந்தபளிங்கு மனத்தினன்   விளங்குமுலகு படைத்தவன்
சென்றுஉயிரில் உறைபவன்  அவற்றைக்காவல் புரிபவன் 
சான்றோர்பெருமை காப்பவன் அவரால்வணங்கப் படுபவன்
பக்தர்சொல்லைக் கேட்பவன் மற்றோரிடத்தில் மறைபவன் 
உயிர்கள்அனைத்தும் காப்பவன் அவற்றைநடத்தி செல்பவன்  

 27. (248-247)
அஸங்க்யேயோsப்ரமேயாத்மா விஸிஷ்டஸ் ஸிஷ்டக்ருச்சுசி: |
ஸித்தார்த்தஸ் ஸித்த ஸங்கல்பஸ் ஸித்திதஸ் ஸித்திஸாதந: ||  

அடங்கிடாத அளவவன்  அறிந்திடவே அரியவன்
அடியவர்க்குப்  பெரியவன் பெருமைகொண்டு சேர்ப்பவன்
பிடித்தமான யாவும்கொண்டு விளங்கிநிற்கும் தூயவன்
நடத்திடுவான்  நினைப்பதை கொடுத்தருள்வான்  கேட்டதை
கடைப்பிடிக்கும் யோகம்தன்னில் இனிமைகொண்டு சேர்ப்பவன்

 28. (257-265)
வ்ருஷாஹி வ்ருஷபோ வி்ஷ்ணுர் வ்ருஷபர்வா வ்ருஷோதர: |
வர்தநோ வர்தமாநஸ்ச விவிக்தஸ் ஸ்ருதி ஸாகர: ||

சிறந்ததர்ம மானவன் தர்மத்திலே ஒளிர்பவன்
பிறந்தயாவும் உள்ளிருந்து யாவுமாகத் திகழ்பவன் 
தர்மம்செல்லப்  படியவன் தர்மம்கொள்ளும் படியவன்
பிறப்புவளரக் காரணன் சிறந்துவளரும் பூரணன்
இறப்பிலாத இனியவன் சிறந்ததொரு தனியிவன்
ஆறுகளாம் வேதங்களும் சென்று சேரும் கடலவன்  

29. (266-275)
ஸுபுஜோ துர்தரோ வாக்மீ மஹேந்த்ரோ வஸுதோ வஸு: |
நைகரூபோ ப்ருஹத் ரூபஸ் ஸிபிவிஷ்ட: ப்ரகாஸந: ||

எதையும்தாங்கும் தோளவன்  மறுக்கவொண்ணா  சிறப்பவன்
வேதம்தந்த  தாயவன்  வேதத்துக்கே நாயகன்
சிறந்தபொருளும்  ஆனவன்  இரந்தபொருள்கள் தருபவன்
தெரிந்துஅவனை அடைபவர்க்கு அருளுமாகத் தெரிபவன்
விரிந்திருக்கும் பற்பலத்  தோற்றம்கொண்ட கொற்றவன் 
கதிரினுள்ளே ஒளியவன் யாவிலுமே ஒளிர்பவன்

30. (276-283)
 ஓஜஸ் தேஜோ த்யுதிதர:ப்ரகாஸாத்மா ப்ரதாபந: |
ருத்த: ஸ்பஷ்டாகஷரோ மந்த்ரஸ் சந்த்ராமஸுர் பாஸ்கரத்யுதி: ||

எளிமைகொண்ட பலமவன்  திறமைகொண்ட வீர்யவான்
ஒளிர்ந்துநின்று தெரிபவன் எரித்துபகை முறிப்பவன்
முழுமைகொண்ட அற்புதம் எழும்நல்வேதச் சொற்பதம்
விழுமியஒலி  மந்திரன் அழகியஒளிச்  சந்திரன்
உலகுமெங்கும் ஒளிதனை அளிக்குமொரு ஆதவன் 
_____________________________

 Prev            First           NextNo comments:

Post a Comment