Wednesday, December 7, 2011

விஷ்ணு சஹஸ்ரநாமம் 31 - 40




31. (284-290)
அம்ருதாம்ஶூத்³ப⁴வோ பா⁴னு: ஶஶபி³ன்து³: ஸுரேஶ்வர: ।
ஔஷத⁴ம் ஜக³த: ஸேது: ஸத்யத⁴ர்மபராக்ரம: ॥ 31 ॥

அமுதக்கதிரின் சந்திரன் கமலம் மலரும் ஆதவன் 
மனதில்தீமை களைபவன் தேவர்களைக் காப்பவன்
பிறவிநோய்க்கு மருந்தவன் விரைவில்கடக்கப் பாலமாம் 
நற்குணத்தின் நாயகன் உண்மையான வீரனாம்

32. (291-300)
பூ⁴தப⁴வ்யப⁴வன்னாத:² பவன: பாவனோனல: ।
காமஹா காமக்ருத்கான்த: காம: காமப்ரத:³ ப்ரபு⁴: ॥ 32 ॥

  நேற்றுஇன்று நாளையாய் என்றும்போற்றத்  தலைவனாம்  
காற்றுபோலப் பறந்துமே சென்றுஎங்கும் பரவுவான்
பெற்றிருக்கும் தூய்மையாலே  எங்கும்கொண்டு நிரப்புவான்
சற்றுகூட அருள்வதிலே திருப்திகொண்டு அமைந்திடான்
பெற்றிருக்கும் ஆசையற்று ஆசைகளை அழிப்பவன்
போற்றிவிரும்பிப்  பெறுவதாக உயர்ந்ததையே  படைப்பவன்
பெற்றிருக்க நாமும்வேண்டும் ஆசைகளைத் தீர்ப்பவன்
பெற்றிருக்கும் கவர்ச்சியாலே மனதைமயக்கும் மன்மதன்
கோருகின்ற வரமளிக்கும் யாவும்கடந்த மன்னவன்

33. (301-308)
யுகா³தி³ க்ருத்³யுகா³வர்தோ நைகமாயோ மஹாஶன: ।
அத்³ருஶ்யோ வ்யக்தரூபஶ்ச ஸஹஸ்ரஜித³னந்தஜித் ॥ 33 ॥

யுகத்தின்முதலில் பிரமனாம் யுகத்தைஇயக்கும் மாலனாம்
அற்புதத்தின் உருவகம் அற்புதத்தின் அற்புதம்
யுகங்கள்நான்கின் முடிவில்யாவும் சென்றுஇவனில்  அடங்குமாம்
காணக்கிடைக் காதவன் கண்டிடஉரு வெடுப்பவன்  
கணக்கில்காலம் வென்றவன் காலம்கடந்து நிற்பவன்
கணக்கிடவே முடிந்திடாத வெற்றிகளைக் குவிப்பவன்

34. (309-318)
இஷ்டோவிஶிஷ்ட: ஶிஷ்டேஷ்ட: ஶிக²ண்டீ³ நஹுஷோ வ்ருஷ: ।
க்ரோத⁴ஹா க்ரோத⁴க்ருத்கர்தா விஶ்வபா³ஹுர்மஹீத⁴ர: ॥ 34 ॥

யாரும்விரும்பும் ஒருவனாம் இணையிலாத பெருமையாம்
உயர்வுடைய பெரியோர்கூட மதிக்கநிற்கும் இறைவனாம்
அறம்தழைக்கும் வண்ணனாம் திறம்படைத்த மன்னனாம்
பிறந்தயாவும் மாயைதன்னில் இணைத்திருக்கும் வண்ணனாம்
அறம்எடுத் திருப்பவன் சினம்விடுத் திருப்பவன்
அறம்மறந்த துட்டர்நெஞ்சில் சினம்விதைத் தழிப்பவன்
திறம்படவே உலகம்காக்க ஆயுதங்கள் கொண்டவன்

35. (319-327)
அச்யுத: ப்ரதி²த: ப்ராண: ப்ராணதோ³ வாஸவானுஜ: ।
அபாம்னிதி⁴ரதி⁴ஷ்டா²னமப்ரமத்த: ப்ரதிஷ்டி²த: ॥ 35 ॥

நிலையின்கோணா உயர்வவன் புகழ்வதான பெயரவன்
உலகின்உயிர் மூச்சவன்  உயிர்களுள்ளே உயிரவன் 
உலகிலுள்ள  எதிலுமுள்ளே இருக்கும்உண்மை தானிவன்  
கடலில்நீரு மானவன் அதனைத்தாங்கி நிற்பவன்
விழிப்புடனே இருந்துதன்னை மட்டுமேசார்ந் திருப்பவன் 

36. (328-336)
ஸ்கன்த:³ ஸ்கன்த³த⁴ரோ து⁴ர்யோ வரதோ³ வாயுவாஹன: ।
வாஸுதே³வோ ப்³ருஹத்³பா⁴னுராதி³தே³வ: புரன்த⁴ர: ॥ 36 ॥

அசுரகுணத்தை அழிப்பவன்  தேவர்படையின் தலைவனாம்
பரந்திருக்கு மண்டம்தனைத் தாங்கியதனைக் காப்பவன்
சிறந்ததான வரமருளும் திறமைகொண்ட நாயகன்
காற்றிலே பறப்பவன் காற்றாய்எங்கும் நிறைபவன்
உயர்ந்தொளிரும் ஒருவனாம் எவரும்வணங்கும் முதல்வனாம்
மயங்குமுயிர்கள்  மனதில்கொண்ட உடலின்உணர்வை அழிப்பவன்

37. (337-346)
அஶோகஸ்தாரணஸ்தார: ஶூர: ஶௌரிர்ஜனேஶ்வர: ।
அனுகூல: ஶதாவர்த: பத்³மீ பத்³மனிபே⁴க்ஷண: ॥ 37 ॥

சோகமற்ற சுகமவன் சோகம்கடக்க உதவுவான்
சம் சாரமானசமுத்திரத்தை கடக்கஉதவும் படகவன்
அம்சமான குணங்கள்கொண்ட திறமைமிக்க அரசவன்
கட்டுப்பாட்டை மதித்துநிலை நிறுத்தஅவ தரிப்பவன்
தாமரைகை கொண்டவன் தாமரையின் விழியவன்

38. (347-355)
பத்³மனாபோ⁴ரவின்தா³க்ஷ: பத்³மக³ர்ப:⁴ ஶரீரப்⁴ருத் ।
மஹர்தி⁴ர்ருத்³தோ⁴ வ்ருத்³தா⁴த்மா மஹாக்ஷோ க³ருட³த்⁴வஜ: ॥ 38 ॥

தாமரையின் நாபியாம்  விழியும்கமல மொக்குமாம்
மனத்திரையும் விலகிட விளங்கும்நெஞ்சக் கமலனாம்
உண்ணும்உணவின் மூலமாய் உடலைஉயிரைக் காப்பானாம்
எண்ணும்த்யான உணர்வினால் உணவைமறக்கச் செய்வானாம்  

நிறைந்தசெல்வம் உடையவன் வளரும்வளத்தின் சிறப்பவன்
பிறந்தவற்றில் யாவிலுலே நிறைந்தமுழுமை யானவன்
தேர்ந்தபார்வை கொண்டவன் யாவும்காணும் திறத்தவன்
கூர்ந்தபார்வை கொண்டகருடன் வாகனமாய்க் கொண்டவன்

39. (356-363)
அதுல: ஶரபோ⁴ பீ⁴ம: ஸமயஜ்ஞோ ஹவிர்ஹரி: ।
ஸர்வலக்ஷணலக்ஷண்யோ லக்ஷ்மீவான் ஸமிதிஞ்ஜய: ॥ 39 ॥

சொல்லவிணை  அற்றவன் ஆன்மமாக ஒளிர்பவன்
வல்லமையைப் பெற்றவன் நியமங்களை அறிந்தவன்
சொல்லுமொரு  மந்திரத்தின் யாகப்பொருள்  ஏற்பவன்
விள்ளக்காணும் ஆய்வினிலே சிறந்தகுணத்தின் முடிவவன்
திருமகளின் துணையிவன் வெற்றிகொண்ட திருமகன்  

 40.(364-373)
விக்ஷரோ ரோஹிதோ மார்கோ³ ஹேதுர்தா³மோத³ர: ஸஹ: ।
மஹீத⁴ரோ மஹாபா⁴கோ³ வேக³வானமிதாஶன: ॥ 4௦ ॥

குறைதல்தேய்தல் அற்றுஎன்றும் நிறைந்தமுழுமை யானவன்
சிவந்தமேனி கொண்டவன் உவந்துஅடையும் விதமவன்
சிறந்துதோன்றும் அண்டம்தனின் காரணமே தானிவன்
பரந்தஉலகம் யாவும்கொண்ட சிறந்தவயிறாய் ஆனவன்
பொறுமைகொண்டு இருப்பவன் புவியைஎன்றும் தாங்குவான்
*விரைபடும் நன்மையாவும் கூடு*மதிட்டம் தானிவன்
விரைந்துசெல்லும் வேகம்கொண்டு சுரந்தளிக்கும் தாயவன்

*விரைபடும் = சிறந்த , *அதிட்டம் = அதிருஷ்டம்
__________________
 Prev            First           Next

2 comments:

  1. மூலப்பொருள் மாறாமல் கவிதை நடையில் செய்யப்பட்ட அழகிய மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள், பாராட்டுகள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி...

    ReplyDelete