Wednesday, December 7, 2011

விஷ்ணு சஹஸ்ரநாமம் 61 - 70
61. (572-580)
ஸுதந்வா க்கண்டபரஸுர் தாருணோ த்ரவிண ப்ரத: |
திவிஸ்ப்ருக் ஸர்வத்ருக் வ்யாஸோ வாசஸ்பதி ரயோநிஜ: ||

அற்புதவில் ராமனாம்  சிறந்த பரசுராமனாம்
அறவழியில் சென்றிடாதோர் அஞ்சுகின்ற அரசனாம்
பெருத்தசெல்வம் உடையவன் பறந்துஎங்கும் நிறைபவன்
அறிந்ததீர்க்க தரிசியாம் பகுத்திடுவான் வரிசையாய்
சொல்லின் செல்வனானவன் பிறந்திடாத ஒர்மகன்
                
62. (581-592)
த்ரிஸாமா ஸாமகஸ் ஸாம நிர்வாணம் பேஷஜம் பிஷக் |
ஸந்ந்யாஸக்ருச்ச்சமஸ் ஸாந்தோ நிஷ்ட்டா ஸாந்தி:பராயணம் ||


சாமவேத மானவன் வேதம்சொன்ன நாயகன் 
வேதமோதும் பக்தர்களைக் காத்துமேநிற் பானிவன் 
இன்பம்நல்கும் மன்னவன் துன்பப்பரி காரமாம் 
உயிரின்நோய்கள் தீர்க்கும்நல் மருத்துவனும் ஆனவன்
மனதின்ஆசை நோய்கள்வேர் அறுத்தெறியும் ஒருவனாம்
விளையும் சாந்தமானவன்  ப்ரளயத்திலும் காப்பவன்
அமைதியான ஜோதியாம் அடைவதான பாதையாம்
                       
63. (593-602)
ஸுபாங்கஸ் ஸாந்திதஸ் ஸ்ரஷ்டா குமுத:குவலேய: |
கோஹிதோ கோபதிர் கோப்தா வருஷபாக்ஷோ வ்ருஷப்ரிய: ||


யோகவங்க மானவன் யோகப் பலனுமானவன்
யாவும்படைத்த ஆண்டவன் அதிலேமகிழ்ச்சி பூண்டவன்
யோகநித் திரைதனில் விழித்திருக்கு முணர்வினன்
போகத்திலே மூழ்கிநிற்கும்  மண்ணுலகின்   காவலன்
சாகாவரம் கொண்டதேவர் விண்ணுலக இந்திரன்
லோகம்காக்கும் வழியவன் கருணைகொண்ட விழியவன்
அறம்தனில் களிப்பவன் அறம்தழைக்க வைப்பவன்

64. (603-611)
அநிவர்தீ நிவ்ரதாத்மா ஸம்க்ஷேப்தா க்ஷேமக்ருச்ச்சிவ: |
ஸ்ரீவத்ஸ வக்ஷாஸ் ஸ்ரீவாஸ் ஸ்ரீபதிஸ் ஸ்ரீமதாம் வர: ||


திறத்துடன் மறத்திலே படாமலே படர்ந்தறம்
புறக்கணித் திடாமலே புலன்தனில் படாமலே
புலம்தனை  மடக்குவான்  ழ்தனி லடக்குவான்
பக்தருக்கு நல்லவை என்றுமேய ருள்பவன்
சித்தத்திலே பக்திசெய்ய தூய்மைதரும் சிவனிவன்
நெஞ்சில்பக்தர் எண்ணமே தினமும்கொண்டி ருப்பவன் 
துஞ்சிடவே திருமகள் தன்னைநெஞ்சில் கொண்டவன் 
மிஞ்சிடவே ஒருவரற்ற சிறந்தநிபுண னானவன்
ஞானம்கொண்ட ஞானியரில் சிறந்தஞானி யானவன்

65. (612-620)
ஸ்ரீதஸ் ஸ்ரீஸஸ் ஸ்ரீநிவாஸஸ் ஸ்ரீநிதிஸ் ஸ்ரீவிபாவந: !
ஸ்ரீதரஸ் ஸ்ரீகரஸ் ஸ்ரேயஸ் ஸ்ரீமாந் லோக த்ரயாஸ்ரய: !!

திருவைஎன்றும் தருபவன் திருவின்அரச னானவன்
திருவின்வாச மானவன் திருவுமானத்  திருவவன்
திருவின்பெருமை ஓங்கச்செய்யும் திறமைகொண்ட பெருமகன்
திருவைத்தரித்த திருமகன் திருவைஉரு வாக்குவான்
திருவினுக்கே திருவளிக்கும் மூவுலகின் நாயகன்


66. (621-629)
ஸ்வக்ஷஸ் ஸ்வங்கஸ் ஸதாநந்தோ நந்திர் ஜ்யோதிர் கணேஸ்வர: !
விஜிதாத்மா விதேயாத்மா ஸத்கீர்த்திஸ் ச்சிந்ந ஸம்ஸய: !!

சிறந்த விழியைக் கொண்டவன் மிகுந்த எழிலின் உடலவன்
ஆ னந்தமய மானவன் என்றும்களி   கொள்பவன்
விண்ணுலகின் தேவனாம் மனதையடக்கும் மாயனாம்
பக்தர்க்கடங்கும் பாசனாம் உண்மைக்குமோர் நேசனாம்
சித்தத்திலே தோன்றும்ஐயம் களைந்தெடுக்கும் ஐயனாம்

67. (630-638)
உதீர்ணஸ் ஸர்வதஸ் சகஷ ரநீஸஸ் ஸாஸ்வதஸ் ஸ்த்திர: !
பூஸயோ பூஷணோ பூதி ரஸோகஸ் ஸோக நாஸந: !!

யாரும்காணப் பூவுலகில் அவதரிக்கும் தெய்வமாம்
எதையும்எதிலும் காணுகின்ற  திறம்படைத்த ஒருவனாம்
தனக்குமேலோர் தலைவனற்ற ஆதியான தலைவனாம்
அன்பில்வழி கூப்பிடவே எதிலும்தோன்றி  அருளுவான்  
அலங்கரிக்கப் படுபவன் எதையுமலங் கரிப்பவன்
துக்கமற்று இருப்பவன் துக்கம்போக்கிச் சிரிப்பவன்

68. (639-647)
அர்சிஷ்மாநர்சித: கும்போ விஸுததாத்மா விஸோதந: !
அநிருத்தோப்ரதிரத:ப்ரத்யும்நோ மிதவிக்ரம: !!

மிளிரும்ஒளியின் தோற்றமாம் வழிபடவே ஏற்றவன்
யார்க்குமாசை மூட்டுவான் ஆசையற்ற தூயவன்
தடைபடாத ஒன்றிவன் இணையிலாத நிபுணனாம்
மிகுந்தவலிமை யுடையவன் வானளந்து நின்றவன்

69. (648-656)
காலநேமிநிஹா ஸௌரிஸ் ஸூர் ஸ் ஸூர ஜநேஸ்வர: !
த்ரிலோகாத்மா த்ரிலோகேஸ: கேஸவ:கேஸிஹா ஹரி: !!

காலம்கடந்த தலைவனாம் துணிவுமிக்கத்  திருமகன்
மூவுலகைப் படைத்தவன் மூவுலகின் நாயகன்
மோக்ஷமருளும் கடவுளாம் அசுரர்மிரளும் பொருளுமாம்
பக்தர்துன்பம் போக்குகின்ற பக்தவத்ச லன்இவன்

70. (657-666)
காமதேவ காமபால: காமீகாநத: க்ருதாகம: !
அநிர்தேஸ்ய வபுர் விஷ்ணுர் வீரோநந்தோ தநஞ்ஜய: !!

வேண்டும்வரமும் பொருளுமாய் யாண்டும்பக்தர்க் கருளுவான்
வேண்டுவன யாவும்கொண்ட வெற்புடைய பொருளுமாம்
அழகினுக்கொர் அழகிவன் அழைத்திட  வருள்புரிபவன்
வரைமுறைப் படாமலெங்கும் படர்ந்தபுதிரு மானவன் 
வேகம்கொண்ட வேகமாம் எல்லையற்ற எல்லையாம்  

__________________
 Prev            First           Next 

No comments:

Post a Comment