Wednesday, December 7, 2011

விஷ்ணு சஹஸ்ரநாமம் 71 - 80



71. (667-676)
ப்³ரஹ்மண்யோ ப்³ரஹ்மக்ருத்³ ப்³ரஹ்மா ப்³ரஹ்ம ப்³ரஹ்மவிவர்த⁴ன: ।
ப்³ரஹ்மவித்³ ப்³ராஹ்மணோ ப்³ரஹ்மீ ப்³ரஹ்மஜ்ஞோ ப்³ராஹ்மணப்ரிய: ॥ 71 ॥

பிரமஞானியே இவன் பிரமமான பெரியவன் 
பிரமனையும் படைத்தவன் ஆதிமுதல் பிரமனாம் 
கருணைகொண்டு யாவும்பேணும் பெருமைகொண்ட பரமனாம் 
பெரியவரிய உண்மைகளும் புரிந்தபெரிய அறிவுமாம் 
வேதம்சொன்ன மூத்தவன்   வேதம்தன்னில் சத்தவன்
பிரமன்தன்னை  நாபிக்கமலம் தன்னில்கொண்ட தாயவன்
பிரமஞானம் கொண்டவரின் மனதில்நிற்கும் தூயவன்

72. (677-684)
மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக:³ ।
மஹாக்ரதுர்மஹாயஜ்வா மஹாயஜ்ஞோ மஹாஹவி: ॥ 72 ॥

சிறந்தமுறையில் செயல்புரிய  வழிபுரியும் திறத்தவன்
புரிந்துநிற்கும் பெரிதுமானச் செயல்களாகச் சிறப்பவன்
ஒளியுடம்பி னன்இவன் ஒளிபரப்பும் ஒளியிவன்
எளிதுமாக யாவருமே வழிபடவே உகந்தவன்
களிப்புடனே முனிவர்களும் யாகம்செய்யப் பொருளிவன்
உயிர்கள்நன்மை பெற்றிடவே யாகமாக இருப்பவன்
உயர்ந்ததான யாகங்களின் நாயகனே தானிவன்

73. (685-695)
ஸ்தவ்ய: ஸ்தவப்ரிய: ஸ்தோத்ரம் ஸ்துதி: ஸ்தோதா ரணப்ரிய: ।
பூர்ண: பூரயிதா புண்ய: புண்யகீர்திரனாமய: ॥ 73 ॥
     
யாரும்துதிக்கத்  தக்கவன் இவன்துதிக்க  யாருளர்
துதிக்குமாரி ருந்துநல் துதியுமான கதியிவன்
துதியில்தோன்றும் மங்கள ஒலியின்இன்பம் தானிவன்
பதம்தனை  துதித்திடும் பக்தருக் கருள்பவன்
குறைபடாத முழுமையாம் நிறைந்துகாணும் தூய்மையாம்
தூய்மைசெய்யும் தன்மையால் தூய்மைக்குளே தூய்மையாம்
பாய்மரமாய்ப் பிறவிக்கடலை கடக்கஉதவும் வாய்மையாம்
போயவனைத் தஞ்சம்கொள்ள கிடைக்குமெதுவும் உண்மையாம்

74. (696-703)
மனோஜவஸ்தீர்த²கரோ வஸுரேதா வஸுப்ரத:³ ।
வஸுப்ரதோ³ வாஸுதே³வோ வஸுர்வஸுமனா ஹவி: ॥ 74 ॥

மனதின்வேகம் கொண்டவன் மனதின்த்யானப் பொருளவன்  
*மாயக்கடலைக் கடக்கவே கிடைத்திருக்கும் படகவன்
உயர்ந்தநிதி யைப்போன்றவன் பக்தர்க்கதை அளிப்பவன்
பக்தர்களைப் பெருநிதியாய்க் காக்கும்நல்   தயாபரன்
வாசுதேவன் மைந்தனாம்  பாற்கடலில் துயிலுவான் 

*மாயக் கடல் = பிறவிக்  கடல்

75. (704-712)
ஸத்³க³தி: ஸத்க்ருதி: ஸத்தா ஸத்³பூ⁴தி: ஸத்பராயண: ।
ஶூரஸேனோ யது³ஶ்ரேஷ்ட:² ஸன்னிவாஸ: ஸுயாமுன: ॥ 75 ॥

 நல்லோர் நாடும் நல்லவன் நற்செயலின் நாயகன்
எதிலுமென்றும் இருந்துநற் பலனளிக்கும் தூயவன்
அனைத்தும்தாங்கு வானிவன்  அணைத்திருக்கும் தாயவன்
யதுகுலத்தின் திலகனாம் சாதுக்களின் இடமுமாம்
யமுனைஆடும் மாயவன் யமனைச்சாடும்  தூயவன்

76. (713-721)
பூ⁴தாவாஸோ வாஸுதே³வ: ஸர்வாஸுனிலயோனல: ।
த³ர்பஹா த³ர்பதோ³ த்³ருப்தோ து³ர்த⁴ரோதா²பராஜித: ॥ 76 ॥
  
உயிரைக்காக்கும் திடமுமாம் அவைகள் தாங்கும் இடமுமாம்
யாவும்காக்கும் கடவுளாம் யாவிலுறையும் இறையுமாம்
தருக்கழித்து பெருமைசேர்க்கும் தருக்கிலாத பெருமையாம்
அடக்கலும் அடங்கலும் இலாதிருக்கும்  பரமனாம்

77. (722-729)
விஶ்வமூர்திர்மஹாமூர்திர்தீ³ப்தமூர்திரமூர்திமான் ।
அனேகமூர்திரவ்யக்த: ஶதமூர்தி: ஶதானந: ॥ 77 ॥

அண்டம்தன்னை உடலில்கொண்ட பெரியதானத் தோற்றமாம்
காணஒளிரும்   தூலமாம் காணாதிருக்கும் சூக்குமம்
தோற்றம்கொண்ட தோற்றமாம் தோன்றாநிற்கும் தொன்மையாம்
நூரின்மடங்கில் தோன்றுவான் பன்முகத்தைக் காட்டுவான்

78. (730-742)
ஏகோ நைக: ஸவ: க: கிம் யத்தத் பத³மனுத்தமம் ।
லோகப³ன்து⁴ர்லோகனாதோ² மாத⁴வோ ப⁴க்தவத்ஸல: ॥ 78 ॥

தனக்குவமை அற்றவன் தனித்ததன்மை பெற்றவன்
இனித்தேதோன்றும் உருவங்களில் பன்மைதனை உற்றவன்
ஞானம்விளங்கக் காரணன் ஞானமொளிரும்  பூரணன்
கேள்வியாக நிற்பவன் கேள்விக்கெல்லாம் பதிலிவன்
அணுவினின்று அண்டமாகப் பெருகும்பிரம அண்டமாம்
உலகிற்சிறந்த *அடைபொருள் உலகைக்காக்கும் அரசனாம்
தவத்திலடையும் தூயவன் தவிக்கும்பக்தர் தாயவன்

*அடைபொருள் = அடையத் தக்க பொருள்


79. (743-752)
ஸுவர்ணவர்ணோ ஹேமாங்கோ³ வராங்க³ஶ்சன்த³னாங்க³தீ³ ।
வீரஹா விஷம: ஶூன்யோ க்⁴ருதாஶீரசலஶ்சல: ॥ 79 ॥

தங்கமய வண்ணனாம் தங்கம்கொண்ட அங்கனாம்
அங்கமெங்கும் வீசுமணம் பூசுகின்ற சந்தனம்
அசுரர்அழிக்கும் சூரனாம் பக்தர்காக்கும் வீரனாம்
இணையிலாத கொற்றவன்  பிறவித்தளை அற்றவன்
செழுமைஎங்கும் தூவுவான் சென்றுஎங்கும் பாவுவான்
எழில்மிகுந்த லீலையால் மனதைமயக்கும் கண்ணனாம் 

80. (753-762)
அமானீ மானதோ³ மான்யோ லோகஸ்வாமீ த்ரிலோகத்⁴ருக் ।
ஸுமேதா⁴ மேதஜ⁴ோ த⁴ன்ய: ஸத்யமேதா⁴ த⁴ராத⁴ர: ॥ 8௦ ॥

தருக்கிடாத தன்மையால் மதிப்பளிக்கும் மென்மையாம்
மதித்துநிற்க  ஒருவனாம் உலகனைத்தின் மன்னனாம்
மூவுலகைக் காப்பவன் நல்லுணர்வின் நெஞ்சவன்
த்யாகத்திலே தோன்றுவான் தன்யனான புண்யானாம்
வாய்மைகொண்ட  நேர்மையாம் புவியைத்தாங்கும் தூய்மையாம்

_________________

Prev         First          Next

No comments:

Post a Comment