Saturday, December 10, 2011

விஷ்ணு சஹஸ்ரநாமம் 81 - 90



81. (763-770)
தேஜோவ்ருஷோ த்³யுதித⁴ர: ஸர்வஶஸ்த்ரப்⁴ருதாம்வர: ।
ப்ரக்³ரஹோ நிக்³ரஹோ வ்யக்³ரோ நைகஶ்ருங்கோ³ க³தா³க்³ரஜ: ॥ 81 ॥

ஆதவனின் மூலம்மழையைப் பெய்யவைக்கும்  மாதவன்
கம்பீரத்தின் தோற்றமாம்  வீரருக்கும் வீரனாம்
கட்டுக்குள்ளே யாவும் வைக்கும் தலைசிறந்த நிபுணனாம்
செல்லுகின்ற திறத்தில்பல உத்திகொண்ட  சக்தியாம்
சொல்லுதற் கரியநல்ல  தன்மைகளின் உறைவிடம் 
ப்ரவத்துக்கும் மூத்தவன் பிரணவமான ஓமிவன்

82. (771- 778)
சதுர்மூர்தி ஶ்சதுர்பா³ஹு ஶ்சதுர்வ்யூஹ ஶ்சதுர்க³தி: ।
சதுராத்மா சதுர்பா⁴வஶ்சதுர்வேத³விதே³கபாத் ॥ 82 ॥

*நான்கு வடிவமானவன் நால்புஜத்தின் பலமிவன்
நால்திசையின் நாயகன் நல்கும்நான்குபதவியாம்
*நால் வகையின் இயக்கத்திலும் பிடிபடாத படியிவன்
நான்குவர்ணப்  பிறப்பினிலும் ஆன்மமாக ஒளிர்பவன்
நாலின் வேதமானவன் நாமும்அறிய வழியவன்
கோளமான அண்டமுமோர்  துகளுமாக் கொள்பவன்

 * ஸ்தூலம் , ஸூக்ஷமம் , காரண , மஹா காரண
* நான்கு பதவி = இந்திர, பிரமன், கைவல்யம், மோக்ஷம்
நால் வகையின் இயக்கம் = மனஸ், சித்தம்,புத்தி, அஹங்காரம்

83. (779- 787)
ஸமாவர்தோனிவ்ருத்தாத்மா து³ர்ஜயோ து³ரதிக்ரம: ।
து³ர்லபோ⁴ து³ர்க³மோ து³ர்கோ³ து³ராவாஸோ து³ராரிஹா ॥ 83 ॥

உலகம்தன்னில் அறம்தழைக்க அவதரித்துக் காப்பவன் 
உலகில்தோன்றும் யாவற்றிலும் வேறுபட்ட உயர்வவன்
நினைந்துருகும் பக்தியோன்றே இவனடங்கும் யுக்தியாம் 
முனைப்பிலாத மனத்தினிலே நிலைத்திடாத சக்தியாம்
அடைந்திடவே எளிதிலாத ஞானஒளி சோதியாம்
பிரித்திடவே இருக்குமறி யாமைபெரிய தடையுமாம்
பரமன்பதம் அடைவதுவோ பாமரர்க்குக்  கடினமாம்
இறைநினைவில் நிலைத்திருக்கும் யோகியர்க்கும் சிரமமாம்
நினைந்தவனைக் கசிந்துருகும் தூயநெஞ்சில்  தோன்றுமாம்

84. (788- 795)
ஶுபா⁴ங்கோ³ லோகஸாரங்க:³ ஸுதன்துஸ்தன்துவர்த⁴ன: ।
இன்த்³ரகர்மா மஹாகர்மா க்ருதகர்மா க்ருதாக³ம: ॥ 84 ॥

மனம்மயக்கும் அழகினன் அமுதம்தந்த மோகினி
பிரணவப்பொருள் உணர்ந்தவர்க்கே தோன்றுகின்ற விரைபொருள்
கணத்தில்தன்னில் தோன்றியண்டம் தன்னில்பரவி நின்றவன் 
மனதிலறி யாமைநோயை விதைத்துவிளை யாடுவான்
மன்னுயிக்கு மன்னனாக அரியசெயல்கள் புரிபவன்
மனதில்பெரும் தயாளனாம் சொல்லாச்செய்யும் சூரனாம்
ஆகமத்தில் தோன்றுவான் தோற்றியதனைப் போற்றுவான

85. (796-805)
உத்³ப⁴வ: ஸுன்த³ர: ஸுன்தோ³ ரத்னநாப:⁴ ஸுலோசன: ।
அர்கோ வாஜஸன: ஶ்ருங்கீ³ ஜயன்த: ஸர்வவிஜ்ஜயீ ॥ 85 ॥


உலகமாயை கடந்தவன் மாயைமயங்கும்  மாயமாம்
உளத்தில்பக்தி கொண்டிடவே உருகிடுமென் மனத்தினன்
பிரமன்நாபி ரத்தினன் எதுவமறியு மிவன்திறன்
எங்கும்ஒளிரும் சூரியன் உணவளிக்கும் தாயுமாம்
பயத்தைப்போக்கும் தந்தையாம் புயத்தைவென்ற சிந்தையாம்
வயத்தில்மனது நின்றிடாமல் செய்யுமழகுக்   கண்ணனாம்

86. (806-812)
ஸுவர்ணபி³ன்து³ரக்ஷோப்⁴ய: ஸர்வவாகீ³ஶ்வரேஶ்வர: ।
மஹாஹ்ருதோ³ மஹாக³ர்தோ மஹாபூ⁴தோ மஹானிதி⁴: ॥ 86 ॥

தங்கவண்ண அங்கனாம் அலைந்திடாநல்  சிந்தையாம்
யோகியர்க்குத் தலைவனாம் யோகத்துயிலைக் கொள்பவன்
பாரதத்தில் சாரதி பார்முடிய  ஓர் கதி
மனம்கசிந்த  பக்தருக்கே விலையிலாத ஓர்நிதி

87. (813-822)
குமுத:³ குன்த³ர: குன்த:³ பர்ஜன்ய: பாவனோனில: ।
அம்ருதாஶோம்ருதவபு: ஸர்வஜ்ஞ: ஸர்வதோமுக:² ॥ 87 ॥

பக்தருடன் களிப்பவன் அவர்க்கருளை புரிபவன்
வித்தகத்தை அருளுமவன் பாபம்போக்கும் புண்ணியன்
பறந்துதுன்பம் போக்குவான் விழித்திருந்து நோக்குவான்
அமுதமளிக்கும் அமுதிவன் அனைத்துமறிந்த அறிவவன்
அடைந்திடவே வழிகள்பல உடையதான இடமவன்

88. (823-829)
ஸுலப:⁴ ஸுவ்ரத: ஸித்³த:⁴ ஶத்ருஜிச்ச²த்ருதாபன: ।
ந்யக்³ரோதோ⁴து³ம்ப³ரோஶ்வத்த²ஶ்சாணூரான்த்⁴ர நிஷூத³ன: ॥ 88 ॥

எளிமையினும்  எளிமையாம் வலிமையினும் வலிமையாம்
களிப்புடனே அருளிடிவே என்றுமிருக்கும் இனிமையாம்
பக்தரிடர் போக்கிடவே கொள்ளும்பல வடிவனாம்
மறமடக்கும் அரமவன் சிரம் வணங்க அடங்குவான்
விரிந்துமாறும் அண்டம்தனைக் காத்திருக்கும் பெரிதிவன்
பிரிந்துவாடும் பக்தர்களின் பகைமுடிக்கும் அருளிவன்

89. (830-838)
ஸஹஸ்ரார்சி: ஸப்தஜிஹ்வ: ஸப்தைதா⁴: ஸப்தவாஹன: ।
அமூர்திரனகோ⁴சின்த்யோ ப⁴யக்ருத்³ப⁴யனாஶன: ॥ 89 ॥

தெரியும்விழியும் ஆயிரம் *ஒளிரும்நாவின் ழுமாம்
புரியும்யாகம் தன்னில்வழங்கும் ழுவகைப் பொருளுமாம்
தேரிலேழு புரவியோடு வானிலெரியும்  சூரியன்
கருமப்பிறப்பு எடுத்திலன் கருமம்செய்து இருந்திலன்
தெரியுமெந்தப்  பொருளினோடும் ஒப்பிடவே அறிதிவன் 
பயத்தைநெஞ்சில் மூட்டுவான் அதனைச்சென்று போக்குவான்

 *காலிகாராளிமனோஜவாசுலோஹிதாசுதும்ரவர்ணா
ஸ்புலிங்கினிவிஸ்வருசி     
                                             
90. (839-850)
 அணுர்ப்³ருஹத்க்ருஶ: ஸ்தூ²லோ கு³ணப்⁴ருன்னிர்கு³ணோ மஹான் ।
அத்⁴ருத: ஸ்வத்⁴ருத: ஸ்வாஸ்ய: ப்ராக்³வம்ஶோ வம்ஶவர்த⁴ன: ॥ 9௦ ॥

அணுவினுக்குள் அணுவவன் அண்டம்கொண்ட அண்டமாம்
மென்மையினும் மென்மையாம் வலிமைகொண்ட வலிமையாம்
உண்மைகொண்டு உயிர்கள்காக்கும் உண்மையான மேன்மையாம்
உலகினுயிர்கள் போலிலாமல் தனித்திருக்கும் சிறப்பிவன்
அளவிடவே முடிந்திடாத சிறப்புடைய ஒருவனாம்
தடையிலாத படியிவன் தன்னைப்பேணும் தலைவனாம்
மடைதிறந்த வெள்ளம்போன்ற கருணைகொண்ட இறைவனாம்
தோன்றிடாத  விதம்உறையும் ஆனமம்தன்னில் உறைபவன்
குன்றிடாத முறையில்ஆன்ம ஒளிவளர்க்கும் ஒளியிவன் 
__________________
Prev         First          Next

No comments:

Post a Comment