Tuesday, March 6, 2012

மதுராஷ்டகம்



இதழ்கள் இனிமை முகமும் இனிமை
விழிகள் இனிமை சிரிப்பும் இனிமை
இதயம் இனிமை நளினம் இனிமை

இனிமை தன்னின் அரசன் அவனே
இனிமை அவனில் யாதும் இனிமை
இனிமை தவிர வேறொன் றிலையே
2
வார்த்தை இனிமை நடத்தை இனிமை
உடைகள் இனிமை நடையும் இனிமை
நகர்தல் இனிமை திரிதல் இனிமை
இனிமை தன்னின் அரசன் அவனே
இனிமை அவனில் யாதும் இனிமை
இனிமை தவிர வேறொன் றிலையே

3
குழலும் இனிமை மலரும் இனிமை
கைகள் இனிமை கால்கள் இனிமை
நடனம் இனிமை நட்பும் இனிமை
இனிமை தன்னின் அரசன் அவனே
இனிமை அவனில் யாதும் இனிமை
இனிமை தவிர வேறொன் றிலையே

4
பாடல் இனிமை குடித்தல் இனிமை
உண்ணல் இனிமை உறங்கல் இனிமை
வடிவம் இனிமை திலகம் இனிமை
இனிமை தன்னின் அரசன் அவனே
இனிமை அவனில் யாதும் இனிமை
இனிமை தவிர வேறொன் றிலையே

5
செயல்கள் இனிமை நீச்சல் இனிமை
திருடல் இனிமை லீலை இனிமை
கோபம் இனிமை சாந்தம் இனிமை
இனிமை தன்னின் அரசன் அவனே
இனிமை அவனில் யாதும் இனிமை
இனிமை தவிர வேறொன் றிலையே

6
மணிகள் இனிமை மாலை இனிமை
யமுனை இனிமை அலைகள் இனிமை
நீரும் இனிமை  ம்  இனிமை
அவனால் யாவும் அடையும் இனிமை
இனிமை தன்னின் அரசன் அவனே
இனிமை அவனில் யாதும் இனிமை
இனிமை தவிர வேறொன் றிலையே

7
கோபிகள் இனிமை லீலைகள் இனிமை
அவனுடன் இனிமை அனுபவம் இனிமை
அடங்கிடும் பாவனை கடைக்கண் பார்வை
கிடைத்திட இனிமை கிடைத்திடாப் பெருமை
இனிமை தன்னின் அரசன் அவனே
இனிமை அவனில் யாதும் இனிமை
இனிமை தவிர வேறொன் றிலையே

8
இடையர் இனிமை பசுக்கள்   இனிமை
*கோலும் இனிமைக் *கோளம் இனிமை
லீலை இனிமை பலனும் இனிமை
இனிமை தன்னின் அரசன் அவனே
இனிமை அவனில் யாதும் இனிமை
இனிமை தவிர வேறொன் றிலையே
*கோல்=மேய்க்கும் குச்சி *கோளம்=அண்டம்

__________________________












PLEASE Do not miss this one



______________________





No comments:

Post a Comment