Friday, March 9, 2012

சிவபஞ்சாக்ஷர ஸ்துதி (ஆதி சங்கரர்)



ஆதி சங்கரர் இயற்றிய  சிவபஞ்சாக்ஷர ஸ்துதி.


பாம்புமாலை அணிந்தவன் கொண்டகண்ணின் மூன்றவன்
சுடலைச்சாம்பல் உடலையே மறைக்கப்பூசித் தரித்தவன்
முடிவிலாத ஆதியாம் மாசிலாத சோதியாம்
முழுதுமாகப் பரந்திருக்கும் வானம்இவனின் ஆடையாம்
"ந"காரத்தின் மகேசனைப் பணிந்துநானும் போற்றுவேன்

கங்கைநீரி லாடுவான் சந்தனத்தைப் பூசுவான்
ப்ரமதகணங்கள் தனக்குமரச னாகவென்றும் திகழ்பவன்
சிறந்ததெய்வ மலர்கள்மந் தாரைதன்னில் அழகுற
அலங்கரிக்கத் தோன்றுவான் அழகுறவே ஆடுவான்
 "ம"காரத்தின் மகேசனைத் தலைவணங்கிப் போற்றுவேன்

அன்னைஉமைத் தாமரை முகம்மலர்ந்து தோன்றிட
விண்ணிலாடும் ஆதவன் வெண்ணிலாவைத் தரித்தவன்
தக்க்ஷயாக மழித்தவன் நீலம்கொண்ட கழுத்தவன்
விடைக்கொடிப் பறக்கவே அமர்ந்திருக்கும் ஓர்சிவன்

"சி"காரத்தின் மகேசனைத் தலைவணங்கிப் போற்றுவேன்
வசிட்டரு மகத்யரும் கௌதமராம் முனிவர்கள்
வேண்டித்துதிப் பாடுவர் கண்டிடவே ஏங்குவர்
பரந்தவானின் சூரியன் குளிர்ந்திருக்கும் சந்திரன்
எறிந்த தீயுமாகக்கண் மூன்றினைப் படைத்தவன்
"வ"காரத்தின் மகேசனைத் தலைவணங்கிப் போற்றுவேன்

பிறந்த யக்ஷனேயிவன் திரிந்தசடையில் சிரிப்பவன்
சிறந்ததிரி சூலம்தன்னைக் கரத்திலே எடுத்தவன்
விரிந்தவான ஆடைதன்னில் தோன்றிடும் திகம்பரன்
"ய"காரத்தின் மகேசனைத் தலைவணங்கிப் போற்றுவேன்

ஐந்தெழுத்து மந்திரம் தனில்பிறந்த தோத்திரம்
கசிந்துபூசை தன்னிலே ஓதுகின்ற போதிலே
தோன்றும்சச்சி தானந்தம்
கிடைத்திடும் சிவன் பதம்



_________________

















No comments:

Post a Comment