Friday, October 31, 2014

1.10. அருளிடுமா மாணிக்கமே


அருளிடுமா மாணிக்கமே
அமுதக் கடல்கடைந்து *வாருணைத் துளிசுவைத்து
சுமுகத்தின் சுகிர்தநிலை சிரச்சுடரால் தான்பெற்று
எழுத்தில் வடிக்கவொண்ணா *நறைகமழுன் பதம்பிடித்து
சுழுமுனையின் எழுவிசையை முயன்றெழுப்பும் சாதகத்தை
அணுவளவும் பழகாத நாயேனாம் கீழோனென்னை
*ஏழீசா இறையோனே மறவாதே மறுக்காதே
ஊழாலே சுழன்றழுகும் ஊனாலே உழல்கின்ற
கழுபிறப்பைப் போக்காயோ உன் கண்ணால் நோக்காயோ 
பாழ்மனதின் இருட்கதவை பொருளாலே கிடைக்காத
விழுப்பொருளே விரைசிவமே இமயமுறை விரிசடையே
அழுதிடவும் நீர்சுரக்கா கல்மனத்தின் மானிடன்நான்
தொழுதிடவும் அறிந்திலனே அருளிடுமா மாணிக்கமே

*சுமுக சுகிர்தநிலை = பேரமைதி பெருநிலை
*வாருணை = ஆனந்தக் கள்
*நறைகமழ் = இன்பம் அளிக்கும்
*ஏழீசா = ஏழாம்  எண்ணுக்குரியோனே / எழுலகை ஆள்வோனே /  ஏழு
நாடிகளையும் ஆள்வோனே
________________

 

No comments:

Post a Comment