Friday, October 31, 2014

1.9. இறைவன் என்ற(றோ) ஆண்டவன்



இறைவன் என்ற(றோ) ஆண்டவன்

இன்றுசிவனும் இறைவன்மாலும் சேர்ந்துவரும் நேரமாம்
கொன்றுவிடும் சனியும்சுபத்தின் சிவனும்அருளும் வேளையாம்
சென்றுவிடும் புரிந்தபாபம் நன்குவரும் செல்வமாம்
இன்றுநின்று செய்யும்பூஜை சென்றுசேர்க்கும் இன்பமாம் 
மிகுதியாக இந்ததிதியில் சொரியும்நெய்யும் அவியுமாம்
விதியைவெல்ல உதவுமாம் பாவக்கணக்கை முடிக்குமாம்
மேலேசொன்ன யாவும்மனிதன் இறைவன்பற்றி சொல்வதாம்
திதியைக்கொண்டு இறைவன்விதியை நிர்ணயிக்கும் நியதியாம்
இதனைக்கேட்டு சிறந்தஇறைவன் வியந்துவியந்து சொல்வதாம்
நான்அறியா விஷயம்யாவும் நான்படைத்த மனிதனின்
அதிசயிக்கும் மூளைதன்னில் அற்புதமாய் உதிக்குதாம்
விதிமுடிக்க விதிபடைக்கும் விந்தைமனிதன் புத்தியாம்
கதிஇனிமேல் நமக்குஇல்லை பகவத்கீதை வேதமும்
ஆண்டவனாம் எனக்குமட்டும் உதவிடவே வந்தது
போலத்தானே எனக்கும்கூட கலியினிலே தோன்றுது
என்றுசொல்லி இறைவன்பயந்து ஒளிந்திருந்து உறைவதும்
நியாமாகத்   தோன்றுவது மூடன்எந்தன் அறிவுக்கு
ஓய்வுகொண்டு மனிதஇனம் மூளைவேலை குறைத்திடும்
வேளைபார்த்து காத்திருக்கான் இறைவன் என்ற(றோ) ஆண்டவன்
_________________


No comments:

Post a Comment