எந்தயுகம் ஓயும்ஐயோ எந்தனுக்கு மாயத்தொல்லை
*அஞ்சுநெறி செஞ்சதில்லே அஞ்செழுத்து சொன்னதில்லே
அன்புநெறி நெஞ்சத்தில்லே பஞ்சுத்திரி போலதில்லே
முன்னின்குறி கொஞ்சத்திலே மிச்சமின்றி போவதில்லே
முன்னின்குறி கொஞ்சத்திலே மிச்சமின்றி போவதில்லே
என்னின்அறி யாமையாலே வந்தவலி ஓயவில்லே
சொந்தமென நெஞ்சத்திலே கொண்டதனம் நிற்பதாலே
அந்தஅரி நெஞ்சத்திலே நிற்கஇடம் சற்றுமில்லே
இந்தஎண்ணம் வந்தபின்னும் எந்தன்மனம் மாறவில்லே
எந்தயுகம் ஓயும்ஐயோ எந்தனுக்கு மாயத்தொல்லை
* அஞ்சு நெறி = பஞ்ச சம்ஸ்காரங்கள் என வைணவத்தில் அழைக்கப்படும்
செந்நெறிகள் : 1.சங்கு சக்ரம் தரித்தல், 2.நாமம் உடலணிதல், 3.தாச நாமம்
ஒன்றை ஏற்றல் , 4.திருமால் வடிவங்களில் ஒன்றை பூசித்து வருதல்,
5.வைணவ திரு மந்திரத்தை உபதேசித்தல்.
அஞ்செழுத்து = நமசிவாய
பஞ்சுத்திரி போலதில்லே = பஞ்சுத் திரி போல நெஞ்சம் இல்லை.
பக்தனுடைய நெஞ்சு பஞ்சுத்திரி போலிருக்க வேண்டும். பஞ்சு போல்
மென்மையுடனும், திரி போல் தீபத்தைத் தாங்கி ஒளிவிடும் திறத்துடனும்
இருக்க வேண்டும்.பஞ்சு தீயில் எரிந்து போகும். திரி தீபமாய் ஒளி விடும்.
முன்னின்குறி = முன்வினை வடு (குறி = வடு)
_______________________
_______________________
No comments:
Post a Comment