எங்கும் இறை பிரம்மம்
1.கரந்ததே பரந்தது பரந்ததால் கரந்தது
2.நிறைந்ததே குறைந்தது குறைந்ததால் குறைந்தது
3.சிறந்ததே இருந்தது இருந்ததால் சிறந்தது
4.மறந்ததே இருந்தது இருந்ததால் மறந்தது
________________
- ஒவ்வொரு அணுவின் உள்ளும் கரந்து ( மறைந்து) இருக்கும் பிரம்மமே இவ்வையமாய்ப் பரந்தது. அது வையமாய்ப் பரந்து பெரிதானதால் நம்முடைய ஐம்புலனிலிருந்தும்,அறிவிலிருந்தும் மறைந்தது.
- முழுதும் நிறைந்த ப்ரம்மம், நம்முடைய குறையால் முழுதாக உணரப்படாமல் குறைவாகத் தெரிகிறது.
- இவ்வாறாக சிறப்பு மிக்க பிரம்மம் என்றும் இருக்கும்படியான ஆதியாக காலத்தைக் கடந்து இருக்கின்றது.அது அவ்வாறாக ஆதியாய் இருப்பதாலேயே நம்மால் சிறப்புடையதாகப் போற்றத் தக்கது
- இவ்வாறாக சிறப்பு மிக்க பிரம்மம் தன்னையே மறந்து செயலற்று சாட்சி பூதமாய் இருப்பது (போல் தோன்றுவது- ஊழித் துயிலில்), தானுமாக எல்லாவற்றிலும் இருப்பதாலேயே. அதன் மறதியே நினைப்புமாக (Supra-conciousness) இருக்கிறது. செயலற்ற அதன் தோற்றமே அதன் செயலாக்கத்தால் தான்.
______________________
No comments:
Post a Comment