Friday, October 31, 2014

1.13. இறை உணர்வுறுதல்


1.13 இறை உணர்வுறுதல்

அரிது அரிது மனித்தப் பிறப்பு
அதனினும் அரிது இறைஉணர் வுறுதல்
அதனினும் அரிது பெரியவர் உறவு
அதனினும் அரிது அவர்வாய்ச் சொல்லால்
இறைஉயர் வறிதல் அரும்பெரும் பேறே


* அகத்தினில் உரைக்கும் காரம்
கணத்தினில் விரைந்தே போக்கும்
இனிப்புமாம் இறைவன் பாதம்
பனிக்குமாம் நெஞ்சில் ஓதம்
விலகுமாம் உந்தன் சேதம்
விளங்குமாம் சித்தன் போதம்

 *அகத்தினில் உரைக்கும் காரம் = அகங்காரம் 

No comments:

Post a Comment