இறை தாண்டவம்
பரதமென்ப தாண்டவம் மனதைக்கொய்யும் தாண்டவம்
சிறந்தநான்கு வேதம்வந்த ஐந்துமான வேதமாம்
உருத்துமூழின் தொல்லைகொய்ய கருத்திலான்மம் விளங்கச்செய்ய
எருதமர்ந்த சிவபதம் தினமும்செய்யும் அற்புதம்
சிறந்தநான்கு வேதம்வந்த ஐந்துமான வேதமாம்
உருத்துமூழின் தொல்லைகொய்ய கருத்திலான்மம் விளங்கச்செய்ய
எருதமர்ந்த சிவபதம் தினமும்செய்யும் அற்புதம்
"பரதம் என்பது தெய்வத்வமாகும் தெய்வ தத்வமாகும். மனத்தைக் கொய்யும் இறை தாண்டவமாகும். ஐந்தாவது வேதமாகக் கருதப்படும் பரதக் கலையானது, நம் ஊழ்வினை களைய, நம் மனத்தில் ஆன்மஒளி விளங்கச் செய்ய, சிவபெருமான் தினமும் நிகழ்த்தும் அற்புதமாகும்”
No comments:
Post a Comment