இறைவன் மனம் மகிழும்நாள்
கல்லைஇறைவன் என்கிறாய் அதனைக்கோவில் என்கிறாய்
பட்டும்பகட்டும் நிறைந்தஆடை அலங்கரிப்பு செய்கிறாய்
கொட்டும்பாலும் தேனுமாக அவிசொரிந்து மகிழ்கிறாய்
ஆனால்உந்தன் இறைவன்பசித்து அம்மணமாய் இருக்கிறான்
தெருவில்திரியும் ஏழைப்புழுதி உடைகளிலே உறைகிறான்
அவனைஅவனில் கண்டுநீ உலகினிலே அவனின்உடை
அலங்கரிப்பில் மகிழும்நாள் அவன்பசியைப் போக்கும் நாள்
இறைவன்மனம் மகிழும்நாள் உடைஅணியும் புனிதநாள்
பிறப்புஇறப்பு என்னும்மனித சாவின்கடை மூடும்நாள்
அலங்கரிப்பில் மகிழும்நாள் அவன்பசியைப் போக்கும் நாள்
இறைவன்மனம் மகிழும்நாள் உடைஅணியும் புனிதநாள்
பிறப்புஇறப்பு என்னும்மனித சாவின்கடை மூடும்நாள்
திறந்திருந்தும் மூடியிருக்கும் கோவில்நடை திறக்கும்நாள்
அன்றுவரை வறண்டிருக்கும் மனத்தின்பாலை வனத்திலே
அன்றுவரை வறண்டிருக்கும் மனத்தின்பாலை வனத்திலே
சென்றுவிடும் இறைவன்கருணை அடிக்கும்என்றும் வெய்யிலே
வென்றுவிடும் அதனைசேவை என்னும்குளிரின் தென்றலே
கொண்டுவரும் இறைவன்உயிரை பூசைசெய்யும் கல்லிலே
____________________
கொண்டுவரும் இறைவன்உயிரை பூசைசெய்யும் கல்லிலே
____________________
No comments:
Post a Comment