ஆசைகொள்ளு ஆசைகொல்லு
ஆசைகொல்ல ஆசைகொள்ளு ஆசைஒன்றைக் கொண்டிடு
பூசையல்ல காசையல்ல ஆசைதன்னைக் கொண்டிடு
நீசஎண்ணத் தின்படாத ஆசைதன்னைக் கொண்டிடு
பேசும்கண்ணில் தென்படாத ஒன்றில்ஆசை வைத்திடு
நாசிவாச மென்றிலாத ஒன்றில்ஆசை வைத்திடு
நாவுபற்கள் மென்றிடாத சுவையிலாசை வைத்திடு
பேசுஒசை யின்படாத ஓலியிலாசை வைத்திடு
கூசுதோ லுணர்ந்திடாதைத் தழுவஆசை கொண்டிடு
ஐம்புலனைக் கடந்தஆன்மக் காட்சிகாண விழைந்திடு
இறைவனாக உன்னைக்காண உன்னைக்கொண்டு உழைத்திடு
______________________________________
No comments:
Post a Comment