கொடை
கபீர்
படகில்புகுந்த உபரிநீரைப் போன்றதாகும் செல்வமும்
மிகுதியாகச் சேரும்போது நிற்கவேண்டும் தள்ளியே
வாரிஎடுத்துக் வீசவேண்டும் இரண்டுகையில் அள்ளியே
கூறியது நானுமல்ல கபீருமான ஞானியே (Kabeer)
மகா பாரதம்
வேண்டிவந்த யாசகனை வருகநாளை என்றனன்
பாண்டவர்கள் ஐவரிலே அண்ணனான யுதிட்டிரன்
அங்குநின்ற வீமனிதனைக் கண்டுநகை புரிந்தனன்
நன்றுநன்று சோதரனே வென்றுவிட்டாய் சாவினை
நின்றுநிலைத்து நாளைவரை வாழ்வதைநீ அறிந்தனை
இந்தநிலை யார்க்குவரும் காலனைநீ வென்றனை
அந்தசொல்லின் மறைபொருளை தருமன்உணர்ந்து கொண்டனன்
அன்றுமுதல் தருமத்தினை உடனுக்குடன் செய்தனன்
No comments:
Post a Comment