மனம்- எண்ணம்
ஜகத்திருக்கும் யாவுமே மனம் படைத்த தோற்றமே
இருந்திராது அதுவுமே எண்ணமொன்றி..லாவிடில்
பிறரை-எண்ணிப் பார்க்கிறாய் அவரை-எள்ளி நகைக்கிறாய்
உன்னைச்சுற்றிக் காணும்-எதுவும் உன்னைக்-காட்டும் *ஆடியே
உன்னில்-இருக்கும் தூய்மை-அழுக்கு இரண்டு-தன்னின் காட்சியே
உன்னிலே திருக்குதோ மண்ணிலே நீ காணலாம்
நீ-உணரும் இன்ப-துன்பம் உனது-மனது எண்ணமே
மனது-எதையும் புணர-வரும் இன்ப-துன்பம் திண்ணமே
எதுவும்-பிறரால் என்று-எண்ணி பதைபதைப்பு ஏனடா
உனக்குத்தோன்றும் எதுவும்-உன்னால் உன்னில்என்று உணரடா
உன்னை-அவனில் இருந்து-வேறு படுத்துவதால் ஐயமே
தன்னை-உணர்தல் அவனைத்-தன்னில் காணல்-என்று பையவே
உன்னை-மாற்றி நெஞ்சை-மாற்றி ஐயம்-தன்னைக் கொய்யவே
வெண்ணையாகும் நெஞ்சு-உருகும் மாயம்-விலகும் உய்யவே
-------------------
ஒருமை கொள்ள இருமைவிட்டு
*மூன்று வேளை பூஜைவிட்டு
நான்கு வேதக் கருவறிந்து
ஐந்து பூத உலகிருந்து
*ஆறுமாக நீர் பெருக்கி
எழுபிறப்பின் வினை அறுக்க
*எண்டிசையின் வெளித் துறந்து
ஒன்பது வாய் உடல் மறந்து
வித்திலா விதம் படுத்த
*பத்துமான கீத மன்னன்
சத்தியத்தின் அன்பு பாதம்
பணிந்திருநீ பாழ் மனமே
*மூன்று வேளை பூஜைவிட்டு = தூல உலகின் பலன் கருதி ,மூன்று வேளை மட்டும், பூஜை என்றில்லாமல் அனவ்ரதமும் இறை நினைவில் இருப்பது.
*ஆறுமாக நீர் பெருக்கி = பக்தியில் விழி நீர் சொரிந்து
*எண்டிசையின் வெளித் துறந்து = உள் நோக்கி இருந்து
*பத்துமான = தசாவதாரன்
No comments:
Post a Comment