Tuesday, November 13, 2018

12. ஈடாக வேறுயாருமில்லை ( தீராத விளையாட்டுப் பிள்ளை )


ஈடாக வேறேதுமில்லை (2)
சொல்ல ஈடாக வேறேதுமில்லை (2)

அண்ணல் விழி-தரும் நிம்மதிக்கீடேதுமில்லை
ஈடாக வேறேதுமில்லை
(3)
பொன்னம்பலச் சிவனின்-வடிவாம் (2)

பொன்னம்பலச் சிவனின்-வடிவாம்   
ஆலத் தருமிசை-தட்சிணா மூர்த்தியும் அவர்தான்
(3)
மண்ணுக்கு அவ்வைய்யன் வந்தார் (4)
அதனை மேன்மைப் படுத்தித்-தன் அன்பைக் கொடுத்தார்
ஈடாக வேறேதுமில்லை
மண்ணுக்கு அவ்வைய்யன் வந்தார் 
அதனை மேன்மைப் படுத்தித்-தன் அன்பைக் கொடுத்தார்
ஈடாக வேறேதுமில்லை
அண்ணல் விழி-தரும் நிம்மதிக்கீடேதுமில்லை
ஈடாக வேறேதுமில்லை
அவருள்ள இடம் தேடிச் சென்று

அவருள்ள இடம் தேடிச் சென்று
பின்னர் அவரெதிர் நின்றபின் துன்பம் ஓடிப்-போய்
(2)
மாயமாய் மறைந்ததே என்பார்
உலகமே மறந்ததே என்பார்
என்னைப் போலிங்கு புவியிலே பலருண்டு கேளாய்
ஈடாக வேறேதுமில்லை
மாயமாய் மறைந்ததே என்பார்
என்னைப் போலிங்கு புவியிலே பலருண்டு கேளாய்
ஈடாக வேறேதுமில்லை


கன்னலைப் போல்-சொல்லினிப்பாம் (2)

கன்னலைப் போல்-சொல்..லினிப்பாம்
அவர் சொல்லே-விளக்கும் ம..றை-நான்கை எளிதாய்
(2)
குள்ளக் குளிர்ந்தாடலெனவே
அருளை வாரிச் சொரிந்தே வருத்தம் குறைப்பார்
ஈடாக வேராறுமில்லை
(2) 
பொல்லாங்கு-பலர் சொல்லி வருவார் (3)..

பொல்லாங்கு-பலர் சொல்லி வருவார்
கசடு பொங்கித் ததும்பும் உற்பாதம்-விளைப்பார்
(2)
அன்னார் திருந்துவது போலே (3)
அவரின் கண்மூடிச் செய்கையை அன்பால் தடுப்பார்
ஈடாக வேராறுமில்லை
அன்னார் திருந்துவது போலே
அவரின் கண்மூடிச் செய்கையை அன்பால் தடுப்பார்
ஈடாக வேராறுமில்லை.. வேராறுமில்லை.. வேராறுமில்லை






No comments:

Post a Comment