எங்கு-சென்று தேடினாலும் ..
எங்கு-சென்று தேடினாலும் உந்தனைப்போல் கிடைக்கவில்லை
(2)
சங்கரமே சத்குருவே குருவே குருவே
எங்கு-சென்று தேடினாலும் ..
அன்னையாய் எடுத்ததும் நீ தந்தையாய் கொடுத்ததும் நீ (3)
ஸ்வாமியாய் தடுத்ததும் நீ ஞானப்பால் அளித்ததும் நீ (2)
எங்கு-சென்று தேடினாலும் ..
எத்தனை-லக்ஷம் ..
நல்லவர்-லக்ஷம் பிறந்தும் அண்ணல் உன்போல் ஒருத்தரில்லை
பக்கம்-வரவே அழைத்து பரிந்தளிக்க யாருமில்லை
பக்கம்-வரவே அழைத்து பரிந்தளிக்க யாருமில்லை
உன்முகத்தைப் பார்த்திருந்தால் உலகின் நினைவில்லை குருவே குருவே ….
உன்முகத்தைப் பார்த்திருந்தால் உலகின் நினைவில்லை
யாரினிமேல் கிடைப்பார்-குருவே
யாரினிமேல் கிடைப்பார் உன்னைப்போல் உலகின் அன்னை (2)
எங்கு-சென்று தேடினாலும் ..
No comments:
Post a Comment