(கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை)
பல்லவி
கண்டேன் கண்டேன் கண்டேன் ஸ்வாமியைக் கண்டேன் காஞ்சியில்
நான்
சரணம்-1
நாள்-தோறும் காணாமல் தண்ணீர்க் குளத்தில்
அடி சென்று துயில் கொண்டு அருள்கின்ற தாதாவை
கண்டேன் கண்டேன் கண்டேன் ஸ்வாமியைக் கண்டேன் காஞ்சியில்
நான்
கண்டேன் கண்டேன் கண்டேன் ஸ்வாமியைக் கண்டேன் காஞ்சியில்
சரணம்-2
தணியாத ஆவலில் பக்தர் பல கோடி கடல்போல
திரண்டாரே உயர்-காஞ்சி தனில்-கூடி
குடி-தண்ணீர் கூடவும் வேண்டாம் எனக் கூறி-கோவிந்தா
என்று-கூவி
பணிந்து தன் உயிர்-தன்னை போக்கிட நெருக்காகி சாகும்வண்ணம் அங்கே கூட்டம் உருவாகி
(3)
இனி தாமதம் செய்யலாகாதென்றுளமாகி
தேவா தேவா தேவா என்றே ஓடி
கண்டேன் கண்டேன் கண்டேன் ஸ்வாமியைக் கண்டேன் காஞ்சியில்
நான்
கண்டேன் கண்டேன் கண்டேன் ஸ்வாமியை கண்டேன் காஞ்சியில்
***
தரிசனம் பார்த்தவர்கள் பாக்கிய சாலிகள்
தரிசனம் பார்க்க இயலாதவர்க அதி பாக்கிய சாலிகள். அவர்களுக்கு வரதன் சென்று தரிசனம் அளிப்பான்.
_________________
ஆஹா அற்புதம்
ReplyDelete