Saturday, December 21, 2019

13. சொன்னாலும் முடியாது (ராகம்:சஹானா)



சொன்னாலும் முடியாது 
(ராகம்:சஹானா)

பல்லவி
சொன்னாலும் முடியாது சொல்லாமல் முடியாது 
அய்யே உன் முகம் கொடுக்கும் பேரிதத்தை
அய்யே ..
சங்கர.. நின்-முகம் கொடுக்கும் பேரிதத்தை
அனுபல்லவி
எந்நாளும் முடியாது என்னால் உன்னை மறக்க 
உன்னாலும்  முடியாது பிள்ளை எனைத் துறக்க
சரணம்-1
மண்ணாளும் ராஜருக்கும் மண்வீட்டுப் பாமரர்க்கும் 
உண்டன்றோ உன் மனத்தில் ஓரிடமே
(சொன்னாலும் முடியாது..)
சரணம்-2
விண்ணோர் தொழும் இறைவன் நல்லோர்களின் துணைவன் .. ஆ ... 
 விண்ணோர் தொழும் இறைவன் நல்லோர்களின் துணைவன்
புல்லோரையும் நீயோ நன்றாக்கிடும் ஒருவன்

சொன்னாலும் முடியாது சொல்லாமல் முடியாது 
அய்யே உன் முகம் கொடுக்கும் பேரிதத்தை 
சங்கர நின் முகம் கொடுக்கும் பேரிதத்தை

எந்நாளும் முடியாது என்னால் உன்னை மறக்க 
உன்னாலும்  முடியாது பிள்ளை எனைத் துறக்க
சொன்னாலும் முடியாது …
சங்கரா …



No comments:

Post a Comment