Monday, December 28, 2020

26. கண்ணிரண்டில் வழிந்தோடும்(எண்ணிரண்டு பதினாறு வயது) **

கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
(Short Music)
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர்-நெஞ்சிருந்தே பொங்கிவரும் கருணை-என்னும் ஆறு  
(2)
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
 (MUSIC)

அந்த-சிவன் முடிவெடுத்தான் மண்மீது பிறந்தான் 
தெய்வமுனி சங்கரரின் வடிவத்திலே இருந்தான் 
(2)
தெய்வமுனி சங்கரரின் வடிவத்திலே சிறந்தான்
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர்-நெஞ்சிருந்தே பொங்கிவரும் கருணை-என்னும் ஆறு  
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
(MUSIC)

பாரதத்தை நடையினிலே ஜாலமெனக் கடந்தார் 
ஞாலமுள்ள மனிதர்-கண்ணை ஞானமுனி திறந்தார்
(2)
ஞாலமுள்ள மனிதர்-கண்ணை ஞானமுனி திறந்தார்
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர்-நெஞ்சிருந்தே பொங்கிவரும் கருணை-என்னும் ஆறு  
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
 (MUSIC)

திட்டிப்-பேசும் பகைவரையும் கடிந்துகொள்ள மறுக்கும் (2) 
தன் பிள்ளை-போல அவரையுமே பொறுக்கும்-அவரின் உள்ளம்
பிள்ளை-போல அவரையுமே பொறுக்கும்-அன்னை உள்ளம் 
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர்-நெஞ்சிருந்தே பொங்கிவரும் கருணை-என்னும் ஆறு  
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு


FIRST Page

 

No comments:

Post a Comment