Saturday, November 10, 2018

9. இதோ இதம் தரும் முகம்(சதா சந்தோஷம் தந்திடும்)

விருத்தம்
சுத்தசத்வ சதானந்தம் சிவரூப சுபோத்பவம் 
மானுஷ வேஷினம்-சாந்தம் சத்யதர்ம சம்ரக்ஷணம் 
சஹஜ சௌலப்ய-பாவம் பவ-ப்ராரப்த நிக்ரஹம்
ஸ்ரீசந்த்ரசேகர சத்குரும் பாதபத்மம் ப்ரணமாம்யஹம்

*”சுத்த சத்வ சதானந்த சிவரூபமாக சஹஜ பாவத்துடன் கூடிய  பேரெளிமையைப் பூண்டு சாந்த ஸ்வரூபமாக சத்ய தர்மத்தைக் காக்கவும் மனித குலத்தின் பவபயத்தைப் போக்கும் மார்க்கத்தை உபதேசிக்கவும் மனிதகாயத்தில் அவதரித்த ஸ்ரீ சந்த்ரசேகர சத்குருவின்பாதகமலங்களைப் பணிந்து நமஸ்கரிக்கிறேன்.”
           ____________________________________________________________________________

இதோ இதம் தரும்-முகம் இதோ அருள் தரும்-கரம்
விடா-பவம் விழும்-விதம் செய்யும் சங்கரர் பதம்
(3)
அன்பைக் காட்டி அணைத்திடும் அவரின் நிலவு நேத்திரம் (2)
அருள்வதில் அவர்மனம்  குறைந்திடாத  பாத்திரம் (2)
  இதோ இதம் தரும்-முகம் இதோ அருள் தரும்-கரம்
விடா-பவம் விழும்-விதம் செய்யும் சங்கரர் பதம் …
ஒரே ஒரு பிடி அரிசி நீயும் தந்திடு

ஒரே ஒரு பிடி அரிசி நீயும் தந்திடு
அதனிலே பவபயம் போக்கலாம் கண்டிடு
(2)
என்றருள் மொழியிலே வாழ்க்கைக் கல்வி தந்தது (2)
சத்திய சொற்பதம் அற்புதம் செய்தது (2)
இதோ இதம் தரும்-முகம் இதோ அருள் தரும்-கரம்
விடா-பவம் விழும்-விதம் செய்யும் சங்கரர் பதம்
பரமனே நடந்திடும் அதிசயம் செய்தது
அனுதினம் ஆயிரம் காதம் கடந்தது
(2)
குறை-சொல்லு..பவரையும் அன்பினில் ஏற்றது (2)
அவரையும் குழந்தையாய் அவர்-மனம் பார்த்தது
எவரையும் குழந்தையாய் தாய்-மனம் பார்த்தது
இதோ இதம் தரும்-முகம் இதோ அருள் தரும்-கரம்
விடா-பவம் விழும்-விதம் செய்யும் சங்கரர் பதம்

நான்மறை தழைத்திட சந்ததம் உழைத்தது (2)
பக்தியை ஊற்றென பீறிடச் செய்தது
மானிட வடிவிலே தெய்வமே வந்தது (2)
மானிடர் வாழ்க்கையில் நல்வழி தந்தது (2)
 இதோ இதம் தரும்-முகம் இதோ அருள் தரும்-கரம்
விடா-பவம் விழும்-விதம் செய்யும் சங்கரர் பதம்
அன்பைக்காட்டி அணைத்திடும் அவரின்-நிலவு நேத்திரம் (2)
அருள்வதில் அவர்மனம்  குறைந்திடாத  பாத்திரம் (2)
  இதோ இதம் தரும்-முகம் இதோ அருள் தரும்-கரம்
விடா-பவம் விழும்-விதம் செய்யும் சங்கரர் பதம்
அண்ணல் சங்கரர் பதம் ..

No comments:

Post a Comment